வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொஞ்சம் அசந்ததனால் சிம்புக்கு வந்த நிலை.. GVM படத்துக்கு பின் STR எடுத்த தடாலடி முடிவு

Simbu said that he will act in hundred crore budget films like STR48: “நல்லவரா! கெட்டவரா!” என்பது நாயகனுக்கு மட்டுமல்ல, சிம்புவுக்கும் பொருத்தமான ஒன்றுதான். நல்லா பேசிக்கிட்டு இருக்கும்போதே பஞ்சு டயலாக் பேசி பஞ்சர் ஆகி போவது சிம்புவின் வாடிக்கைகளுள் ஒன்று. தற்போது நூறு கோடி பட்ஜெட் படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்து உள்ளார் சிம்பு. ஏன்? என்னாச்சு? என்பது போல் சிம்புவின் ஆர்வலர்கள் ஆர்வமுடன் விசாரித்து வருகின்றனர்.

கிராமத்து சப்ஜெக்ட் மற்றும் தந்தை பாசத்தை அடிப்படையாக கொண்டு பாரதிராஜா மற்றும் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றியடையவில்லை இதனால் தனது அடுத்த படத்தை கவனமாக தேர்வு செய்தார் சிம்பு. மாநாடு படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்த சிம்பு தரமான வெற்றியை பதிவு செய்தார்.

அதன் பின் வெந்து தணிந்தது காடு படம் கேங்ஸ்டர் ஸ்டோரி என்றாலும் கௌதம் மேனன் அவரது ஸ்டைலில் மெருகேத்தி வசூல் ரீதியாக வெற்றி அடைய செய்தார்.  இந்த படத்தின் போது கௌதம் மற்றும் சிம்புவிற்கு இடையே சில பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு இருந்தாலும் மீண்டும் பத்துதலயில் கௌதம் நடிகனாக ஒன்றிணைந்தார்.

Also read: நன்றி மறந்த சிம்பு.. டிஆர்-ரை மதிக்காத STR

பத்து தல ரீமேக்தான் என்றாலும்  சிம்புவிற்கு வேற மாதிரியான முகவரியை தந்தது. முதலுக்கு மோசம் இல்லாமல் ஓரளவு வெற்றியுடனே திரும்பினார் இந்த பத்துதல மன்மதன். தொடர்ச்சியாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த சிம்புவிற்கு அடுத்ததாக கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 ரெடியாக இருந்தது.

எஸ் டி ஆர் 48 திரைப்படத்திற்காக பல சாகச பயிற்சிகளை மேற்கொண்டு வரும் சிம்பு இரு வேடங்களில் சரித்திர பின்னணியை கொண்ட இளவரசராக நடிக்க இருக்கிறார் என்று தகவல் பரவி உள்ளது. முழுக்க முழுக்க பிரம்மாண்ட செட் போட்டு உருவாகி வரும் எஸ் டி ஆர் 48 சிம்புவை, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை தாண்டி மார்கெட்டை உயர்த்தி வேற லெவலில் கொண்டு போகும் என்று பிரபல சினிமா ஆர்வலர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

Also read: சிம்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு போன 5 படங்கள்.. சீனா தானாவ அடித்து துவட்டிய தொட்டி ஜெயா

Trending News