புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரு வழியா பிரச்சனையை முடித்த சிம்பு.. பிரம்மாண்ட படத்துக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

Actor Simbu: சிம்பு என்றாலே சர்ச்சை தான் என்று சொல்லும் அளவுக்கு இவர் எப்பவும் ஏதாவது ஒரு பிரச்சனையை தலையில் தூக்கி சுமந்து கொண்டே இருப்பார். அதன் காரணமாகவே இவர் நல்ல பட வாய்ப்புகளை எல்லாம் இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சுதாரித்துக் கொண்ட சிம்பு இப்போது தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார்.

ஆனாலும் பிரச்சனைகள் இவரை தேடி புயல் வேகத்தில் வருகிறது. அப்படித்தான் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் இருந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதாவது சிம்பு உட்பட இன்னும் சில நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்தனர்.

Also read: சிம்புவால் நாசமா போன படம்.. வெற்றி இயக்குனரின் கேரியரையே காலி செய்த சம்பவம்

அந்த வகையில் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிக்க மறுத்தது தொடர்பாக புகார் வந்ததை எடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. சரியான விளக்கம் தரவில்லை என்றால் நிச்சயம் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனால் கமல் கூட்டணியில் அவர் நடிக்க இருந்த படம் தொடங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் இப்போது அது அனைத்திற்கும் சிம்பு முடிவு கட்டி விட்டார். அதாவது ஐசரி கணேஷ் தற்போது பத்திரிக்கையாளர் முன்பாக தங்களுடைய பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டோம் என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Also read: பிக் பாஸ் கோடி கோடியாய் கொட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்ல.. கேபிஒய் தீனா செய்யப் போகும் தரமான சம்பவம்

அவர் கூறியிருப்பதாவது, அண்ணன் தம்பிகளுக்குள் இருக்கும் சிறு பிரச்சனை தான். அதை நாங்கள் சரி படுத்தி விட்டோம். சிம்பு மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். கடந்த 32 வருடங்களாக நாங்கள் ஒரே குடும்பமாக தான் பழகி வருகிறோம். அவ்வாறாக டி ராஜேந்தரால் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை சரியாகி விட்டது என்று தெரிகிறது. அந்த வகையில் பிரம்மாண்ட படத்திற்கு இப்போது கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. விரைவில் சிம்பு எந்த தடையும் இல்லாமல் கமல் தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் கலந்து கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: தைரியம் இல்லாமல் போன சிம்பு.. எஸ் ஜே சூர்யாவால் பறிபோன பட வாய்ப்பு

Trending News