திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

படம் ப்ளாப் ஆன பாட்டு ஹிட்.. முதல் முறையாக 150 மில்லியன் கடந்து சாதனை படைத்த சிம்பு

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் காதல் அழிவதில்லை படத்தின்மூலம் நாயகனாக பரவலாக அறியப்பட்டவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. எவ்வளவு நாளைக்குத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே இருப்பீர்கள் என்று வரை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின்மூலம் யங் சூப்பர் ஸ்டாராக மாற்றினார் கவுதம்.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். ஒரு காலத்தில் ஷூட்டிங்கிற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த சிம்பு, தற்போது மளமளவென வரிசையாக படங்களை விரைவாக முடித்து வருகிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் சரியான வெற்றியை பெறவில்லை.

படம் சரியாகபோகவில்லை என்றாலும் தமன் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டது.

இதனிடையே அந்த பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் 150 மில்லியன் பார்வைகளை பெறுவதென்பது இதுவே முதல்முறை. தனுஷின் ரவுடி பேபி பாடல் 1,220,614,646 பார்வைகளைப்பெற்று முதல் இடத்தில உள்ளது.

Trending News