புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஜாட மாடயாக வம்பிழுத்த சிம்பு.. மௌனம் சாதிக்கும் தனுஷ்

சிம்பு நடிப்பில் வருகிற பொங்கல் அன்று வெளிவரவுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு சர்ச்சையையும் கிளப்பியது என்று தான் கூற வேண்டும்.

டீஸரில் சிம்பு கையில் ஒரு பாம்பை பிடித்திருப்பார், இதற்கு ஒரு தரப்பினர் பாம்பை துன்புறுத்தியதாகவும், வன உரிமைச் சட்டத்தை மீறியதாக வழக்கு தொடர்ந்தனர்.

அது முடிந்த பிறகு நேற்று ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியானது. மீண்டும் மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. சிம்பு டிரைலரில், ‘நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன் டா’ என ஒரு மாஸான வசனம் பேசியிருப்பார்.

simbu
simbu

முதலில் இந்த வசனத்தை கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது அலசி ஆராய்ந்து அசுரன் தனுஷ் நடித்த படம் தானே, அப்ப சிம்பு ஜாடைமாடையாக தனுஷ் பற்றி பேசியுள்ளார் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஆடியோ விழாவில் சிம்பு இனிமேல் பேச்செல்லாம் கிடையாது, செயல்தான் எனவும் பேசுவார். தற்போது சிம்பு பேசிய இந்த இரண்டு பேச்சையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். சிம்பு பேசிய வசனத்தை பற்றி தனுஷ் தற்போது வரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News