தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்கள் சிம்புவை வைத்து பல படங்களை இயக்கி வருகின்றனர்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து சிம்பு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் வெளியிட்டனர். அதில் வெந்து தணிந்தது காடு என படத்திற்கு பெயரிட்டுள்ளனர். அதில் காட்டில் சிம்பு குச்சி வைத்தபடி போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இப்படத்திற்கு கௌதம்மேனன் முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என பெயர் வைத்துள்ளார். ஆனால் படத்தின் கதை ஆக்சன் சம்பந்தப்பட்டது என்பதால் படத்தின் தலைப்பு இதற்கு சரியாக இல்லை என படக்குழுவினர் முடிவு செய்து அதன் பிறகு வேறொரு பெயர் ஒன்றை வைத்துள்ளனர்.
அதாவது பாரதியார் பாடல் இடம்பெற்ற அக்கினி குஞ்சொன்று கண்டேன் என படத்திற்கு முதலில் வைத்துள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தலைப்பு பலராலும் விமர்சிக்கப்படும் என நினைத்து. அதன் பிறகு படத்தின் பாடல் இடம்பெற்ற வெந்து தணிந்தது காடு என்பதை படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
தற்போது ஒரே படத்தில் 3 தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு முன்பு மற்ற தயாரிப்பாளரின் படத்தில் நடிப்பதாக சிம்பு பெறப்பட்ட அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்த பிறகுதான் இப்படத்தில் நடிக்க முடியும் என பலரும் கூறி வந்தனர். தற்போது சிம்பு அந்த பணத்தொகையை திருப்பி தருவதாகவும் திட்டமிட்டபடி வருகிற 6ம் தேதியன்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.