செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அந்த நடிகைக்காக தலைகீழாக நிற்கும் சிம்பு.. ஹீரோயின் தேடும் படலத்தில் இறங்கிய கமல்

சிம்பு கடந்த இரண்டு வருடங்களாக வெற்றி நாயகனாக வாகை சூடி வருகிறார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த பத்து தல படம் இவருக்கு வெற்றியை கொடுக்கும் வகையில் அமைந்தது. இதனை அடுத்து இவருடைய அடுத்த படமான 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி கமல் தயாரிக்கப் போகிறார்.

அத்துடன் இப்படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்படம் வரலாற்று மிகுந்த படமாக எடுக்கப்படுவதால் இதற்கான பயிற்சி சிம்பு முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் சென்று அதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.

Also read: வரலாற்றுப் படத்தை மிஞ்சும் அளவிற்கு எஸ் டி ஆரின் 48 வது படம்.. 100 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கிய கமல்

இதனை அடுத்து இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயினை நடிக்க வைக்க வேண்டும் என்று கமல் தீபிகா படுகோனே கேட்டிருந்தார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் கமலுக்கு பெரிய இடியாக அவர் கொடுத்தது தான் சம்பளம். அதாவது இப்படத்தில் நடிப்பதற்கு சிம்பு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக கேட்டு சில பல டிமாண்டையும் வைத்திருக்கிறார்.

இவரின் சம்பளத்தை கேட்டு கிறங்கிப் போன கமல் இவர் நடிக்கவே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். அதற்கு பதிலாக வேற ஏதாவது ஹீரோயினை பார்க்கலாம் என்று முடிவெடுத்து கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதை தெரிந்து கொண்ட சிம்பு, கமலிடம் எனக்கு ஹிந்தி படத்தின் ஹீரோயின் தான் ஜோடியாக வேண்டும் என்று தலைகீழாக நின்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: 100 கோடி பட்ஜெட்டில் தளபதி 68க்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு.. இணையத்தில் பற்றி எரியும் புகைப்படம்

இந்த அளவுக்கு சிம்பு பிடிவாதமாக இருப்பதால் இப்படத்தின் இயக்குனர் மற்றும் கமல் மிக யோசனையில் இருக்கிறார்கள். பிறகு வேறு வழியில்லாமல் இவர் கேட்டபடி ஹிந்தியில் குறைந்த பட்ஜெட்டில் வேறு ஏதாவது ஹீரோயின் அமையுமா என்று மிக மும்பரமாக தேடும் படலத்தில் இறங்கியுள்ளார்.

தற்போது சிம்பு செய்து வரும் குளறுபடியினால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சிம்பு கேரக்டர் படி எப்பொழுதுமே எந்த படத்திலும் ஒரு பிரச்சனை இல்லாமல் ஆரம்பிக்க மாட்டார். இப்படத்திற்கு சிம்பு ஹீரோயினை வைத்து பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.

Also read: இந்தியன் 2 ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த கமல் என்ன சொன்னார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஷங்கர்

Trending News