தமிழ் சினிமாவில் எப்போதுமே குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்குமே அவர்களுடைய இளமை கால கட்டங்களிலிருந்து போட்டிகள் அதிகமாக இருந்து வருகின்றன.
தனுஷ் படத்தில் நடித்த நடிகைகளை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க சிம்பு ஆர்வம் காட்டுவது, அதைப்போல் சிம்பு மாஸ் படம் கொடுத்தால் தனுஷும் தன் பங்குக்கு ஒரு மாஸ் படத்தை களமிறக்குவது என இருவரும் மாறி மாறி தங்களுடைய போட்டியை வெளிப்படையாக காட்டிக் கொண்டனர்.
அதே நேரத்தில் போட்டியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் கவனம் செலுத்தினார் தனுஷ். அதன் விளைவு இன்று ஹாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் தனுஷின் நடிப்பை பாராட்டும் அளவிற்கு வந்துள்ளது.
ஆனால் சிம்புவின் கதியோ அதோகதி ஆனது. சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனது, அதே நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு குடைச்சல் கொடுத்தது என அவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது.
தற்போது அவற்றையெல்லாம் சரி செய்து நல்ல பெயர் வாங்க நினைக்கும் சிம்பு சமீபகாலமாக தன்னுடைய படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் தன்னுடைய படத்தின் கதை களங்களிலும் மாற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
அதன் எதிரொளிப்பு தான் வெந்து தணிந்தது காடு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கிராமத்து கதையில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த அசுரன் படத்தின் மூலம் அவருக்கு தேசிய விருது கிடைத்தது நினைவிருக்கலாம். இது சிம்புவின் ஈகோவை டச் செய்து விட்டதாம்.
அதன் காரணமாகவே கிராமத்து கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை கிராமத்து படமே எடுக்காத கௌதம் மேனன் கையில் அந்த பொறுப்பை கொடுத்ததுதான் அனைவருக்கும் அதிர்ச்சி. மேலும் தனுஸுக்கு முன்னாடி இருந்தே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நான் தன்னுடைய திறமையை காட்டி விருதுகளை குவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சபதம் எடுத்துள்ளார் சிம்பு.