ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிள்ளையார் சுழி போட்டது சிம்பு தான்.. திருமணத்திற்குப் பிறகு மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தன்னுடைய திரை வாழ்க்கையை பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இவர் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி படம்தான். ஆரம்பத்தில் இந்த கதையை எழுதிக் கொண்டு சிம்புவிடம் விக்னேஷ் சிவன் காண்பித்துள்ளார். அப்போது இந்தக் கதையை நீ நாடா எழுதின, ரொம்ப நல்லா இருக்கு என தனக்கும் உத்வேகம் கொடுத்தது சிம்பு தான்.

மேலும் தனக்கு பாடல் வரிகள் எழுதுவதில் ஆர்வம் வந்ததும் சிம்புவால் தான் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அதாவது போடா போடி படப்பிடிப்பு தளத்தில் நீ பாடல் வரிகள் எழுது என தனக்கு பிள்ளையார் சுழி போட்டது சிம்பு தான் என்ற அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

போடா போடி படத்தை தொடர்ந்து பல படங்களில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். மேலும் அந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தின் கதையை எழுதிவிட்டு பல நடிகர்களை நாடியதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அப்போது விஜய் சேதுபதிதான் தனக்கு வாய்ப்பளித்தார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்ததாக கூறினார். சொந்த வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் சரி விக்னேஷ் சிவனுக்கு பிள்ளையார் சுழி போட்டது சிம்புதான் என பல ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்.

Trending News