ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரம்மாண்டமாக உருவாகும் சிம்புவின் 50வது படம்.. பிரபல இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தை

சிம்பு தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். மாநாடு படத்திற்குப் பிறகு அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்போது சிம்புவின் கைவசம் பத்துதல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்கள் உள்ளது.

இதை அடுத்து சிம்புவின் 49வது படத்தை யார் இயக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகவில்லை. ஆனால் இப்போது சிம்புவின் 50 ஆவது படத்திற்கு இயக்குனர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என சிம்பு ஆசைப்படுகிறாராம்.

Also Read : சினிமாவில் திறமை 90% இருந்தாலும் அது ரொம்ப முக்கியம்.. தொடர் தோல்வியால் கதறும் சிம்பு பட நடிகை

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான சிம்பு இப்போது தான் தனது 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். ஆகையால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆகையால் வெற்றி இயக்குனர்களிடம் சிம்பு கதை கேட்டு வருகிறாராம்.

அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம். சமூகத்தின் மீது சர்க்கரை கொண்ட விஷயங்கள், வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்டு படங்களை எடுக்கக்கூடியவர் முருகதாஸ். ஆகையால் இவருடைய படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் தான்.

Also Read : சிம்புவை போல் விஷால் தேடும் ஆதரவு.. ரொம்பவும் ஊறிப்போன அரசியல் ஆசை

அதேபோல் சுதா கொங்கரா சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை எடுத்து மாபெரும் வெற்றி கண்டார். அதுமட்டுமின்றி இந்த படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது. இப்போது அட்சயகுமாரை வைத்து சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமிக்கை எடுத்து வருகிறார். சிம்புவின் படத்தை இவர் இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மிக விரைவில் சிம்புவின் 50வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி விரைவில் சிம்புவின் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்தடுத்து செம ட்ரீட் கொடுக்க உள்ளார் சிம்பு.

Also Read : ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகைகள்.. அட போங்கடா என திருமணம் செய்து செட்டில் ஆன சிம்பு ஜோடி

Trending News