Simbu : சிம்புக்கு 42 வயது ஆகிய நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவரது தந்தை டி ராஜேந்தர் எப்படியாவது தனது மகனுக்கு திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
இந்நிலையில் சிம்பு பட கதாநாயகி ஒருவர் 37 வயதாகியும் சிங்கிளாகவே இருந்து வருகிறார். அதோடு வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க ஆசைப்படுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் வேதிகா. இவர் லாரன்ஸ் நடிப்பில் உருவான முனி, காஞ்சனா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
திருமணத்தில் விருப்பமில்லாமல் இருக்கும் சிம்பு பட நடிகை
சிம்புவுடன் ஜோடி போட்டு இவர் நடித்த படம் தான் காளை. இப்போது தேவிகாவுக்கு 37 வயதாகும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். தற்போதும் இளமையாகவும், ஒல்லியாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.
திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் தான் ஒல்லியாக இருக்கிறேன் என்று வேதிகா கூறியிருக்கிறார். மேலும் வாழ்நாள் முழுவதும் இதே போல் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க ஆசைப்படுகிறேன்.
அப்போது தான் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்று வேதிகா கூறியுள்ளார். என்னதான் சினிமாவில் பல உயரங்கள் தொட்டாலும் சொந்த வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
ஆனால் வேதிகா திருமண உறவில் தனக்கு விருப்பமில்லாதபடி பேசியது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்ந்து இருக்கிறது. பொதுவாகவே இப்போது சினிமா பிரபலங்கள் விவாகரத்துச் செய்தி அடுத்தடுத்த வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
அதற்கு திருமணம் ஆகாமல் தனித்து வாழ்வதே மேலானது என்று சிலர் இவ்வாறு முடிவு எடுத்து வருகின்றனர்.