சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

சிம்புவின் பரம எதிரியை மாப்பிள்ளையாக்கும் பிரபு.. தடபுடலாக நடக்க போகும் 2ம் திருமணம்

Simbu-Prabhu: சிம்பு என்றாலே சர்ச்சை தான் என்று சொல்லும் அளவுக்கு அவரை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டே இருக்கும். அதனாலேயே அவருக்கு திரையுலகில் ஒரு சில எதிரிகளும் இருக்கின்றனர். அப்படி அவர் பரம எதிரியாக நினைக்கும் ஒருவர் சிவாஜி வீட்டு மாப்பிள்ளை ஆக இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி மிக பெரும் வரவேற்பை பெற்றது. விஷால், எஸ் ஜே சூர்யா என்ற இரண்டு முரட்டு சிங்கிள்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இவர் கரம் பிடிக்க இருக்கும் செய்தி தான் இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படுதோல்வியை தழுவியது. அந்த சமயத்தில் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வராததும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதிலிருந்தே இவர்கள் இருவரும் எதிரிகளாக மாறிப் போய் இருக்கின்றனர்.

Also read: ஆதிக் மடியில் விழுந்த ஏகே 63 பட வாய்ப்பு.. அஜித் நண்பர் கொடுத்த சர்டிபிகேட்

அந்த வகையில் சிம்புவின் எதிரியான ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி தடபுடலாக நடக்க இருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா கடந்த 2009 ஆம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.

ஐஸ்வர்யாவின் முதல் திருமணம்

prabhu-daughter
prabhu-daughter

ஆனால் தற்போது அவர் விவாகரத்து பெற்ற நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஐஸ்வர்யாவுக்கு காதல் மலர்ந்திருக்கிறது. இதற்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் திருமண தேதியும் முடிவாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது.

Also read: அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

Trending News