புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Simbu: சன் ரைஸ்க்கு முன்கூட்டியே காத்துக் கிடக்கும் சிம்பு.. கண் கெட்ட பிறகு எஸ்டிஆர் பண்ணும் நமஸ்காரம்

சிம்புவா இது என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு மணிரத்தினத்தின் தக்லைப் படத்தில் நடந்து கொள்கிறாராம். இந்த படத்தில் மணிரத்தினம் “சன்ரைஸ் ஷாட்” எல்லாம் நிறைய எடுத்துள்ளாராம். அதற்கெல்லாம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து விடிவதற்குள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறாராம் சிம்பு.

2-3 வருடங்களுக்கு முன், சிம்பு தன்னுடைய ஊதாரித்தனத்தால் பல படங்களை இழந்திருக்கிறார். அப்படி பெரிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் இரண்டு படங்கள் கை மீறிப் போனதை நினைத்து இன்றும் வருந்துகிறார். அந்த படங்களை நடித்திருந்தால் இன்று அவர் வேறு நிலைமையில் இருந்திருப்பார்.

கண் கெட்ட பிறகு எஸ்டிஆர் பண்ணும் நமஸ்காரம்

சிம்பு செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அந்த படத்திற்கு பெயர் எல்லாம் வைத்து போஸ்டர் முதற்கொண்டு வெளியிட்டிருந்தனர். அந்தப் படத்தின் பெயர் கான். செல்வ ராகவன் வலிய வலிய வந்தும் சிம்புவின் அலட்சியத்தால் இந்த படம் ட்ராப்பானது.

செல்வராகவன் படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் மற்றும் ஒரு படமும் இவர் கையை விட்டு சென்றது. இந்த படத்தை கொம்பாலையா ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இந்த படமும் சிம்பு அலட்சியத்தால் நின்று போனது.

கொம்பாலையா பிலிம்ஸ் மற்றும் சுதா கொங்காரா இரண்டு முறை இந்த படத்திற்காக ஒரு மீட்டிங் அரேஞ்ச் செய்து இருந்தனர். இரண்டு முறையும் சிம்பு தூங்கி விட்டாராம் அதனால் அவர்கள் மீட்டிங்கிற்கு இவர் செல்லவில்லை. இப்படி ஒரு டெடிகேஷன் இல்லாத ஹீரோ வேண்டாம் என விலகி விட்டனர்.

Trending News