புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிம்புக்கு பறிபோன தேசிய விருது இயக்குனரின் பட வாய்ப்பு.. ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது

திரை உலகில் சில காலங்கள் பெரும் சறுக்களை சந்தித்து வந்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் தரமான ஒரு கம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவருடைய சினிமா வாழ்வு தற்போது ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இப்போது சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.

Also read: சிம்பு பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பத்து தல படத்துக்கு இவ்வளவு தான் டிமாண்ட்டா!

கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து இருக்கும் அந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சிம்பு இதுவரை எந்த திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை. அடுத்ததாக சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படங்கள் பற்றி பல தகவல்கள் வந்தாலும் இன்னும் அவர் பேச்சு வார்த்தை தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கு பல மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை ஆரம்பிக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

Also read: செம்ம பிஸி, அடுத்தடுத்து சிம்பு உறுதி செய்த 6 படங்கள்.. 2025 வரை என்னோட ராஜ்ஜியம்தான்

ஏனென்றால் சிம்பு தன்னுடைய சம்பளத்தை இப்போது எக்கச்சக்கமாக உயர்த்தி இருக்கிறார். அதாவது அவர் தற்போது சுதா கொங்கரா படத்தில் நடிப்பதற்காக 35 கோடி வரை சம்பளமாக கேட்டிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தற்போது படமே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் பல தேசிய விருதுகளை தட்டி சென்றது. இதனால் அவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக பல நடிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் போது சிம்பு கைக்கு வந்த வாய்ப்பை இப்படி தவறவிட்டது சில விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

Also read: சிம்பு கேட்கிற சம்பளத்தை கொடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சரி சொல்லியும் முட்டுக்கட்டை போட்ட இயக்குனர்

Trending News