வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அடுத்த வருடத்துக்கு தள்ளி போன சிம்பு படம்.. குட்டை தேங்கிய தண்ணீராக நிற்கும் படங்கள்

மாநாடு படமும், வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து சிம்புவும் நடித்து வருகிறார். ஆனால் அவருடைய பொறாத காலம், எடுத்து வைக்கும் புதிய முயற்சிகள் எல்லாம் குட்டையில் தேங்கிய தண்ணீர் போல இருக்கிறது.

அடுத்ததாக சிம்பு நடிப்பில் கமலஹாசன் மணிரத்னத்தின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகி இருக்கும் Thug Life படம் தான் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கமலின் மகனாக பெரும் அந்தஸ்த்தான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து வரலாறு படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது தள்ளிப்போனது. இதற்க்கு நடுவில மாதவனுடன் இணைந்து டைனோசர்ஸ் எனும் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் தகவல் மட்டும் தான் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறதே தவிர, அதற்க்கு பின் எந்த அப்டேட்டும் வருவதில்லை..

அடுத்த வருடத்துக்கு தள்ளி போன சிம்பு படம்

சூழ்நிலை இப்படி இருக்க, தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்டு போட்டது. சிம்புவும் வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்கும் பணத்தை தந்துவிடுவதாக கூறிவிட்டார். இந்த தடை நீங்கிய பிறகு, ags நிறுவன தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து படத்தில் தான் அடுத்ததாக சிம்பு நடிக்கவுள்ளார். எப்படியும் அது அடுத்த வருடம் தான் ஆரம்பிக்கும்.

அந்த படத்தை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து டைனோசர்ஸ் படத்தில் நடிக்க போகிறார் சிம்பு. இதுவும் அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்த நிலையில், தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாக்கப்போகும் படம் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட இருப்பதால், அது இன்னும் ஓராண்டு காலம் தள்ளி போக அதிக வாய்ப்புகள் உள்ளது.

எப்படி பார்த்தாலும் சிம்புவை ஜூன் மாதத்தை தொடர்ந்து தான் அடுத்த அடுத்த படங்களில் தியேட்டர்களில் பார்க்கமுடியும். அது என்னவோ சிம்புவுக்கு மட்டும் ஒரு படம் சொன்னால் சொன்ன தேதியில் வெளிவருவதே இல்லை..

Trending News