சிம்பு அவர் கூட படம் பண்ணுகிறார், இவர் கூட தான் அடுத்த ப்ராஜெக்ட் என இவரின் லைன் அப்பை கேட்கும் பொழுதெல்லாம் அவரின் ரசிகர்கள் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள். ஆனால் அதில் எந்த ப்ராஜெக்ட்டும் நகலாமல் கிணற்றில் போட்ட அம்மிக்கல் போல் கிடக்கிறது. தற்போது தக்லைப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார் சிம்பு.
எஸ் டி ஆர் 48, ராஜ் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்த படம் அதிக பட்ஜெட் காரணமாக ட்ராப்பானது. அதன்பின் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 2018 பட இயக்குனர் ஜூட் ஜோசப் ஆண்டனியுடன் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சிம்புவை நம்பி பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க யாரும் தயாராக இல்லை.
சிம்புவே சில படங்களை தயாரிக்க முடிவு செய்தார் அதற்காக துபாய் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி என்பவரை பார்த்து படம் பண்ணும் எண்ணத்தில் இருந்து வருகிறார். இதற்கு இடையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளது. மீண்டும் விஷால், தனுஷ், சிம்பு, ஆகிய மூவர் மீதும் ரெட் கார்டு விழுந்துள்ளது.
சிம்பு, மைக்கேல் ராயப்பனுக்கு படம் பண்ணுவதாக கூறி இன்னும் கால் சீட் கொடுக்கவில்லை அதனால் தான் அவர் மீது ரெட் கார்டு போட்டார்கள். இருந்தாலும் அந்த பணத்தை திரும்ப கொடுப்பதாக சிம்பு வாக்கு கொடுத்து இருக்கிறார். தற்சமயம் எல்லா படத்தையும் ஓரங்கட்டி விட்டு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துக்காக ஒரு படம் பண்ணவிருக்கிறார் சிம்பு.
அஸ்வத் மாரிமுத்து சிம்பு கூட்டணி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் கூட இருக்கிறார். இப்பொழுது சிம்புவிற்கு ரெட் கார்டு போடப்பட்டதால் இந்த படம் டேக் ஆன் ஆகுமா என்று பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது.