வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பட சம்பவம் போலவே மாறிய அசினின் உண்மை வாழ்க்கை.. சல்மான், கமல் வலை வீசியும் சிக்காத மாமி

Actress Asin: அசின் சினிமாவுக்கு வந்த முதலிலேயே அஜித், விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுமட்டும்இன்றி தனது திறமையால் முக்கிய இடத்தையும் பிடித்தார். அவருடைய நடிப்பில் வெளியான போக்கிரி, கஜினி, தசாவதாரம் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு அசின் விலகி விட்டார். இல்லையென்றால் இப்போது நயன்தாரா போல் அசினும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்திருப்பார். இந்நிலையில் அவர் நடித்த படத்தின் சம்பவமே அவரது நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்தேறி உள்ளது.

Also Read : வாயினால் அழிந்து நாசமான 5 நட்சத்திரங்கள்.. பாலிவுட் தான் முக்கியம் என எல்லாத்தையும் இழந்த அசின்

அதாவது தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் முழுக்க போட்டுவிட்டு பாலிவுட் பக்கம் அசின் சென்று விட்டார். அப்போது சல்மான் கான் உடன் அசின் நடித்த போது கிசுகிசுக்கள் எழுந்தது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் கமலுடன் நடித்த பெரும்பாலான நடிகைகள் அவருடன் சேர்த்து வைத்து பேசப்பட்டுள்ளனர்.

அந்த லிஸ்டில் அசினும் என்ன விதிவிலக்கா. அவருடைய பெயரும் இடம்பெற்று இருந்தது. ஆனால் சல்மான் கான், கமல் என இருவரிடமுமே சிக்காமல் ஒரு பெரிய தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அசின். அதாவது சூர்யா மற்றும் அசின் நடிப்பில் வெளியான திரைப்படம் கஜினி.

Also Read : சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ்.. ரஜினி கமல் போல் இமேஜ் குறையாத மகா நடிகன்

இந்த படத்தில் ஏர் வாய்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சூர்யாவை காதலிப்பவராக அசின் நடித்திருந்தார். ஆனால் அவருடன் சேர முடியாமல் அசின் அந்த படத்தில் இறந்து விடுவார். நிஜ வாழ்க்கையில் சுதாகரித்துக் கொண்டு தனது வாழ்க்கையை சாமர்த்தியமாக அமைத்துக் கொண்டார்.

அதன்படி கஜினி படத்தைப் போலவே கடந்த 2016 ஆண்டு மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுவதுமாக குடும்பத்தை அசின் கவனித்து வருகிறார்.

Also Read : பிரபாஸ் கமல் கூட்டணி கிளைமாக்ஸ் இல் இப்படி ஒரு டிவிஸ்டா?.150 கோடி கொடுக்குறதுல தப்பே இல்லை

Trending News