செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

90ஸ் கனவு கன்னி சிம்ரனுடன் இணைந்து பிரசாந்த் நடித்த 5 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அந்தகன்

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை நடனத்தின் மூலம் கவர்ந்திழுத்தவர். அத்துடன் பெரும்பாலான இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் சிம்ரன். இவர் அந்த நேரத்தில் சாக்லேட் பாயாக வந்த பிரசாந்துடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

கண்ணெதிரே தோன்றினாள்: ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசாந்த், சிம்ரன், கரண் மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு தேவா இசை அமைத்திருக்கிறார். இப்படம் காதலுக்கும் நட்புக்கும் இடையே ஏற்பட்ட உணர்வுகளை வெவ்வேறு விதத்தில் அழகாக நடிப்பின் மூலமாக புரிய வைத்திருப்பார்கள். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் லாபத்தை கொடுத்தது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழாவை கண்டது.

Also read: என்ன இது சிம்ரன்? வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்ல

ஜோடி: இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், விஜயகுமார், நாசர் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட் பாடல்களாக அமைந்தது. இதில் இவர்கள் இருவரும் காதலின் ஆழத்தை புரிந்து கொண்டு குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வதற்காக செய்யும் புரட்சி தான் காதல். அதை மிகவும் அழகாக இவர்களின் நடிப்பு மூலம் வெளிப்படுத்தி இருப்பார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

பார்த்தேன் ரசித்தேன்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசாந்த், சிம்ரன், லைலா மற்றும் ரகுவரன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் சிம்ரன் முதன்முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் சிம்ரனின் நடிப்பு அதிக அளவில் பாராட்டுகளை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபீஸில் பிளாக் பஸ்டர் படமாக ஆனது.

Also read: பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்

தமிழ்: இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசாந்த், சிம்ரன், வடிவேலு, ஊர்வசி, நாசர் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இப்படம் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும். பின்னர் இவர்களுக்குள் ஏற்படும் காதலை மிகவும் உணர்வுபூர்வமாக நடித்துக் காட்டி இருப்பார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இவர்கள் சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக மாறியது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் மறுபடியும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் தான் அந்தகன். இதில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதற்கான ரிலீஸ் தேதியை கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பிரசாந்துக்கு ஜோடியாகும் இன்டர்நேஷனல் நடிகை.. தாறுமாறாக ரெடியாகும் அந்தகன்

Trending News