வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நல்லவனா மட்டும் வாழ அந்த ஆண்டவனாலேயே முடியாது.. சிம்ரனின் புது முடிவால் குவியும் பட வாய்ப்புகள்

90 மற்றும் 2000 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக பணியாற்றியிருக்கிறார்.

மேலும் 2000ஆம் ஆண்டுகளின் கனவுக்கன்னி என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது சிம்ரன் தான். ஏனென்றால் இவரது இடுப்பு மடிப்பில் பலர் சொக்கி கிடந்தனர். அதுமட்டுமில்லாமல் அந்தக் காலத்தில் இவரது புன்னகைக்கும், நடனத்திற்கும் மட்டுமே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டாம்.

அதோடு சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்டதோடு, தற்போது ரீஎன்ட்ரி ஆகி சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரனுக்கு தொடர்ந்து பல படங்களில் வில்லி வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது சிம்ரனுக்கு திருமணத்துக்குப் பிறகு கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்காததால், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்குப்பிறகு வில்லியாக சில படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தில் வில்லியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் சிம்ரன்.

தற்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ்  ரீமேக்கான ‘அந்தகன்’ படத்திலும் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று உள்ளாராம். ஏற்கனவே இந்த படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்குகிறார் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

மேலும் படத்தின் கதைப்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடிக்க உள்ளாராம். இந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் தபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simran
Simran

எனவே, சிம்ரன் கள்ளக்காதல் கொலையாளியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஒருபுறம் இருந்தாலும், கனவுக்கன்னி சிம்ரனை மீண்டும் வெள்ளித்திரையில் காண பலர் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Trending News