புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

சீமராஜா படத்திற்கு பின் வில்லியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோ பெரிய சண்டியர் ஆச்சே எப்படி சமாளிப்பாரோ!

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார் சிம்ரன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் கைதட்டல் வாங்கி வருகிறார்.

கார்த்திக்கின் இரட்டை வேடத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் சர்தார். இந்த படத்தில் 45 வயது சிம்ரன் வில்லியாக நடிக்க உள்ளாராம். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் சர்தார் படத்தை இயக்கி வருகிறார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகின்றனர். இதைத்தவிர முனிஸ்காந்த் காமெடி கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இப்படி இருக்கும் பட்சத்தில் வில்லியாக சிம்ரன் களம் இறங்க உள்ளார்.

ஏற்கனவே சீமராஜா படத்தில் வில்லியாக நடித்திருப்பார். அதைப்பார்த்து இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்காக 2 கோடி செலவிட்டு ஜெயில் போன்ற படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி உள்ளனர்.

கார்த்திக்கின் வயதான தோற்றத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. சிம்ரனின் வில்லி கதாபாத்திரம் கார்த்திக்கின் கூட்டணியில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிம்ரன் பேட்ட படத்திற்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்துடன் அந்தாதுன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sardar-cinemapettai
sardar-cinemapettai

Trending News