திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இடுப்பை வைத்து இப்படிலாம் கூட ஆட முடியுமா என நிரூபித்த சிம்ரன்.. டான்சில் கலக்கிய 7 பாடல்கள்

நடிப்பைத் தாண்டி நடனத்தை மட்டும் வைத்தே ரசிகர்களை தன் வலையில் விழ வைத்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகையாக, தயாரிப்பாளராக, டான்ஸராக என பல முகங்களைக் கொண்டவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். 3 பிலிம்பேர் விருதுகள், 2 கலைமாமணி விருது என்று பல விருதுகளை தட்டிச் சென்றவர்.

தமிழ் சினிமாவில் வி.ஐ.பி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிம்ரன், பல முன்னணி நடிகர்கலுடன் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இன்றுவரை அவரின் நடனத்திற்காக ஏங்கி தவிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில தினங்களுக்கு முன்பு அவர் செய்த டிக் டாக் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பேட்ட படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரசிகர்களை உசுப்பேற்றி சென்றார் என்றே கூறலாம்.

தற்போது ராக்கெட்ரி நம்பி, துருவநட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கின்றன. அவர் நடிப்பில் வெளிவந்து பாடலில் இடுப்பை வெடுக் வெடுக்கென்று ஆடி ரசிகர்களை மயக்கிய வீடியோ பாடல்களை தற்போது பார்க்கலாம்.

விஐபி

பிரபுதேவா, சிம்ரன், ரம்பா, மணிவண்ணன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997 -ல் வெளிவந்தது விஐபி. ரொமான்டிக் காமெடி நிறைந்த படமாக, 100 நாட்களையும் தாண்டி ஓடியது. இந்த படத்தில் ‘மின்னல் ஒரு கோடி, எந்தன் உயிர் தேடி வந்ததே’ என்ற பாடல் இன்றுவரை ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றே கூறலாம்.

எதிரும் புதிரும்

மம்முட்டி, நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த படம் எதிரும் புதிரும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் ஆடி இருப்பார் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

நேருக்கு நேர்

வசந்த் இயக்கத்தில் 1997இல் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது நேருக்கு நேர். இந்த படத்தில் வரும் ‘மனம் விரும்புதே உன்னை’ பாடல் ரிப்பீட் மோடில் கேட்கத் தோன்றும்.

வாலி

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் வெளிவந்த படம் வாலி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். ஜோதிகா கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். அஜித் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் என்றே கூறலாம். இந்த படத்தில் வரும் ‘நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை’ என்ற பாடல் கவர்ச்சியில் சற்று தூக்கலாகவே இருக்கும.

யூத்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2002ல் வெளிவந்த படம் யூத். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு இணையாக சிம்ரன் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு ஆடி இருப்பார். இந்த பாடல் மூலம் உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

பார்த்தேன் ரசித்தேன்

பிரசாந்த், லைலா, சிம்ரன் நடிப்பில் ரசிகர்களின் மனதில் இன்றளவும் ரசிக்கக் கூடிய படமாக பார்த்தேன் ரசித்தேன் படம் உள்ளது. சிம்ரன் சற்று வில்லியாக நடித்திருக்கும், இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் ‘தின்னாதே என்னை தின்னாதே’ பாடல் மிகவும் பிரபலமானது.

நியூ

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் மட்டுமில்லை நடிப்பிலும் பட்டையைக் கிளப்பிய படம் நியூ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார் ‘தொட்டால் பூ மலரும்’ என்ற ரீமேக் செய்யப்பட்ட பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Trending News