வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

உங்கள நம்பினது போதும்! சூர்யா46 படத்திற்கு மலையாள இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமாவுல இருக்கிற எல்லா நடிகர்களுக்குமே தனித்தனி ஸ்டைல், அப்ரோச்சுனுக்கு இருக்குன். ஆனால், சூர்யாவோட ஸ்டைலும் சரி, நடிப்பும் சரி அது எல்லோராலும் பேசப்பட்ட ஒன்னு, கவனிக்கப்பட்ட ஒன்னு.

அதுனாலதான், சினிமாவுல விஜய்கூட நடிச்சிருந்தாலும், அவருக்கு பின்னாடி வந்த தனுஷ், ஷ்யாம், மாதவன் உள்ளிட்ட பல பேரு ஹீரோவாக ரீச்சான பிறகுதான் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், கஜினி, சிங்கம், வேல், அயன்னு அப்பிடீனு ஹிட் படமாக கொடுத்து இன்னிக்கும் மக்கள் மனசுல நிலைச்சிருக்காரு.

அதுக்கு அவரோட ஹார்ட் ஒர்க்கும் முக்கிய காரணம், நந்தா படத்துல அப்படி கேரக்டரா நடிச்சிரு, கொடூரத்தை முகத்துல காட்டிருப்பாரு, பிதாமகன்ல, விக்ரமுக்கே டஃப் கொடுத்து, கல கல கேரக்டரா புகுந்து விளையாடிருப்பாரு.

வாரணம் ஆயிரம் படத்துல இப்படியும் பாடிய இளைச்சு படத்துக்காக சிக்ஸ் பேக்ஸ் வச்சு உடம்ப வருத்திக்க முடியுமான்னு எல்லோரும் கேட்டாங்க. அதுதான் சூர்யா. ஆனால், சமீப காலமாக அவரோ படங்கள் சூரரைப் போற்று, ஜெய்பீம் தவிர எதுவும் தியேட்டரில ஓடல. சமீபத்துல சிவா இயக்கத்துல, சூர்யா, திஷா பதானி, பாபி தியோல்னு நட்சத்திரப் பட்டாளமே நடிச்ச படம் கங்குவா.

ஏகப்பட்ட ஹைப், எக்கச்சக்க எதிர்பார்ப்பு இதெல்லாம் பொசுக்குன்னு போற மாறி நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசான அன்னைக்கே நெகட்டிவ் கமெண்ட் வந்து படத்தை சாச்சிருச்சு. இன்னும் படம் ரூ.100 கோடி வசூலிக்கலீன்னு பேசிக்கிறாங்க. அதுனால கங்குவா 2 ஆம் பாகம் இருந்தால், அதுல சில குறைகள சூர்யா சரி செய்வாருன்னு எல்லாரும் நம்பறாங்க.

சூர்யா 46 பட இயக்குனர் இவர்தான்?

இந்த நிலையில, சூர்யா 44 படத்துல, இளைஞர்களோட ஃபேவரெட் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிட்டு இருக்காரு. அவரோட கடைசிப்படம் ஜிகர்தண்டா 2 ரஜினி முதற்கொண்டு எல்லோருமே பாராட்டுன படம். அதுனால சூர்யா ரசிகர்களும் நம்பிக்கையோட இருக்காங்க.

அடுத்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்துல சூர்ய நடிக்கப் போற சூர்யா 45. ஆறு படத்துக்கு அப்புறமா திரிஷா கூட நடிக்கிறாரு சூர்யா. படத்தோட பூகையும் கோயில்ல போட்டிருக்காங்க. படம் நிச்சயம் ஹிட்டாகும்னு பேசிக்கிறாங்க. ஏன்னா கதை அப்படி. அடுத்து, சூர்யா 46 படத்தை பிரபல மலையாள பட இயக்குனரு அமல் நீரத் இயக்கப்போவதாக போசிக்கிறாங்க.

ஏன்னா, அவரு மலையாளத்துல ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் லீடிங்ல இருக்காரு. குறிப்பாக பிக் பி, அன்வர், பேச்சுலர் பார்டி, 5 சுந்தரிகள், காம்ரேட் அமெரிக்கா, வரதன்,பீஸ்ம பர்வம் போன்ற படங்களை இயக்கியிருக்காரு. கடைசியா போகைன்வியா படத்த இயக்கியிருந்தாரு. இப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு.

கங்குவாவுக்கு பிறகு சூர்யாவின் முடிவு!

அதுனால அடுத்த படம் வித்தியாசமான கதையோட சூர்யாவை வைச்சு பண்ண பேச்சுவார்த்தை போய்டிருக்கறதா தகவல் வெளியாகுது. இது உறுதியானா, நிச்சயம் சூர்யா வாடிவாசல் இல்லாமல் 3 ஹேட்ரிக் உறுதின்னு சினிமா விமர்சகர்கள் சொல்லாங்க. கூடுதலா, கங்குவாவுக்கு அப்புறமா வித்தியாசமான கதைகளை சூர்யா தேர்வு செஞ்சிட்டு வர்றதாவும் பேசிக்கிறாங்க.

suriya-director

Trending News