திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிங்கம் பட தலைப்பை வைக்க இருந்த விஜய்.. எந்த படத்திற்கு தெரியுமா?

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு விமர்சனங்கள், பல கேலி, கிண்டலுக்கு ஆளான விஜய் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது இலக்கை மட்டுமே நோக்கி பயணம் செய்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக உச்சம் தொட்டுள்ளார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இதுவரை ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் வில்லு. இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

பிரபுதேவா இயக்கிய வில்லு படத்திற்கு முதலில் சிங்கம் என்று தான் தலைப்பு தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதே தலைப்பில் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி படம் இயக்கியுள்ளார்.

பின்னர் வில் என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், எஸ்.ஜே சூர்யா அந்த தலைப்பில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வந்துள்ளார். இதற்கு பின்னரே வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.

villu-vijay
villu-vijay

Trending News