திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிங்கம் புலி டைரக்ட் செய்த 2 மாஸ் படங்கள்.. அஜித் சூர்யாவை வைத்து மிரள விட்டவர்

சிங்கம் புலி நல்ல காமெடி நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர் மாஸ் நடிகர்களை வைத்து படம் எடுத்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இயக்குனராக பணியாற்றி ஒரு சில படங்களை எடுத்துள்ளார். அதிலும் முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் சூர்யா வைத்து இவர் இயக்கியுள்ளார்.

ரெட்:

அஜித் நடிப்பில் வெளியான ரெட் திரைப்படத்தை சிங்கம் புலி தான் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் நீதிமன்றத்தில் அஜீத் பேசும் வசனம் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தக்கூடிய வகையிலேயே இருக்கும்.

தேவா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அன்றைய காலகட்டத்தில் அஜித்தின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மாஸ் இமேஜ் கொடுத்த படம். ஆனால் படம் வசூலில் அடி வாங்கியது.

ரெட் படத்தின் முழு படம் பார்க்க

singam-puli
singam-puli

மாயாவி:

சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான மாயாவி திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது ஆனால் இப்படத்தில் வரும் கடவுள் தந்த அழகிய வாழ்வு எனும் பாடல் இன்றும் பலரின் மொபைல் ரிங்டோன் தான் உள்ளது. இப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்துள்ளார். வசூலும் சுமார்தான்.

மாயாவி படத்தின் முழு படம் பார்க்க

காமெடியன் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி சூர்யா மற்றும் அஜித்தை வைத்து இயக்கிய இரண்டு படங்களுமே இவரின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இவர் இயக்குனர் அவதாரம் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் அவதாரத்தை விட்டு காமெடி அவதாரத்தை எடுத்து தற்போது வரை வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

Trending News