நடிகர் சிங்கமுத்து மற்றும் வடிவேலு பஞ்சாயத்து ஊருக்கே தெரிந்த கதை. ஆரம்ப காலத்தில் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளார்கள். அதிலும் கீரி பாம்பு போல தான் சண்டை போடுவார்கள். போதா குறைக்கு வடிவேலு திமுக-க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியபோது, சிங்கமுத்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இப்படி ஆரம்ப காலம் முதலே இருவரும் எலியும் பூனையுமாக தான் சண்டை போட்டுகொண்டு இருந்தார்கள்.
இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு, சிங்கமுத்து பல பெட்டிகளில் வடிவேலுவின் உண்மை முகத்தை கிழித்திருப்பார். வடிவேலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்த நேரத்தில், சிங்கமுத்து கொடுத்த இந்த பேட்டி படு வைரலானது. ஆனால் அந்த காலகட்டத்தில் எல்லாம் அமைதியாக இருந்த வடிவேலும், சில மாதங்களுக்கு முன்பு சிங்கமுத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
வடிவேலு மீது அவ்வளவு பயமா?
தன்னை பற்றி மிக மோசமாக தரக்குறைவாக பேசி, அவதூறு பரப்புகிறார் என்று கூறி வடிவேலு தரப்பு சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்ததோடு, தனக்கு மான நஷ்டஈடு தரவேண்டும் என்றும் கூறி வந்தனர்.
இதை தொடர்ந்து, சிங்கமுத்து தரப்பில் இருந்து, தான் ஷூட்டிங் ஸ்பாட்-ல் நடந்தது, மற்றும் அவரை பற்றி சக நடிகர்கள் கூறியவற்றை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். மற்ற படி, அவதூறாகவோ, உண்மைக்கு புறம்பாகவோ எதையும் கூறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி இருக்க சமீபத்தில் வடிவேலு தொடர்பான அவதூறு விடியோக்கள் அனைத்தையும் நீக்க வேண்டும். மேலும் இனி அவரை பற்றி எந்த அவதூறான கருத்துக்களும் முன்மொழியக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொண்டு, இனி எந்த விதத்திலும் அவரை பற்றி தவறாக பேசமாட்டேன் என்று கூறியுள்ளார்.
இவரது இந்த செயல், வேறு வழி இன்றி செய்ததாக இருந்தாலும், நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள். இவர் என்ன அன்னிக்கு ஒன்னு, இன்னைக்கு ஒன்னு என்று பேசுகிறார். அவர் கூறியது அனைத்தும் உண்மை என்று வாதாட வேண்டியது தானே? அப்போ அன்னிக்கு சிங்கமுத்து சொன்னது பொய்யா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம், வடிவேலு பணத்தால் விளையாடியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்க பட்டுள்ளது.