சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மூன்று மாதங்களிலேயே டிஆர்பி இன் குயின்னாக ஜொலிக்கும் சிங்கப் பெண்ணே.. ஆனந்திக்கு முகம் தெரியாத ஆணழகன்

Singapennae Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்கப் பெண்ணே சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இந்த நாடகம் கிட்டத்தட்ட ஆரம்பித்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் முக்கோண காதலை அழகாக காட்டி ஒவ்வொருவருடைய உணர்வுபூர்வமான சந்தோசங்களை வெளிக்காட்டி வருகிறது.

முக்கியமாக அன்புக்காக தான் இந்த நாடகமே பார்க்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு இமேஜை தக்க வைத்துக் கொண்டார். எப்படி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் பார்ப்பவர்களை கவர்ந்ததோ, அதேபோல தற்போது சிங்கப் பெண்ணே சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வரும் அமல் ஜீத் அவருக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

அதனாலேயே தற்போது டிஆர்பியில் குயினாக சிங்கப் பெண்ணே ஜொலிக்கிறது. அந்த வகையில் ஆனந்தி பார்வைக்கு அன்பு தப்பானவராகவும் முரடன் ஆகவும் தெரிகிறார். ஆனால் உண்மையிலேயே ஆனந்தியின்  சந்தோஷத்திற்கு மறைமுகமாக அன்பு தான் இருந்து அனைத்து வேலைகளையும் பார்க்கிறார். அதாவது துள்ளாத மனமே துள்ளும் படத்தின் கதை போலவே.

Also read: ரோகினியின் மாமாவுக்கு ஊத்தி கொடுத்து உண்மையை வாங்க போகும் முத்து.. வடிகட்டின முட்டாளாக இருக்கும் விஜயா

இதற்கிடையில் மகேஷ், ஆனந்தியின் வெகுளித்தனமான பேச்சும் அவருடைய கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சமாக மனதை ஈர்த்துவிட்டது. அதனால் ஆனந்தியை காதலிக்க ஆரம்பித்து விட்டார். காதலித்த கையுடன் வீட்டிலேயும் சொல்லி சம்மதத்தை வாங்கி விட்டார். ஆனால் அதற்கான ஒரு சேலஞ்ச் வின் பண்ணினால் நீ நினைத்தபடி நடக்கும் என்கிற ஒரு பெட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் அன்பு மற்றும் மகேஷ் ஒரு தலைப்பட்சமாக காதலிப்பதில் யாருடைய காதல் ஜெயிக்கப் போகிறது. ஆனந்தி மனதில் யார் இடம் பிடிக்கப் போகிறார் என்ற கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. ஆனால் ஆனந்திக்கு தற்போது வரை முகம் தெரியாத ஆணழகனாக அன்பு அனைத்து நல்லதுகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆனந்தி மனதில் அன்பு மறைமுகமாக ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

Trending News