Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே அதிக செல்வாக்கை பெற்றது. ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்த கதாநாயகி குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னைக்கு வேலைக்கு வருகிறாள்.
அதன் பின்னர் நகரத்தில் அவள் சந்திக்கும் சவால்கள் தான் இந்த சீரியலின் கதை. இதில் கதாநாயகியாக வரும் ஆனந்தியின் துடுக்கான தைரியம் மற்றும் வெள்ளந்தி தனத்திற்காக ஆரம்பத்தில் இந்த சீரியல் அதிகமாக ரசிக்கப்பட்டது.
மேலும் கதையின் நாயகன் அன்பு கேரக்டரும் இன்று வரை ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு இடையே வரும் மித்ரா, மகேஷ் கேரக்டர் ஆரம்பத்தில் ரசிக்கப்பட்டாலும் இப்போது பெரிய அளவில் சலிப்பு வந்துவிட்டது.
சிங்க பெண்ணே சீரியலுக்கு விழுந்த பெரிய அடி
சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களின் பெரிய இயக்கம் அன்பு தான் அழகன் என்ற ஆனந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அதை சரியாக புரிந்து கொண்டு இயக்குனர் அதே கான்செப்டில் கொண்டு போனாலும் கண்டன்ட்டை ஜவ்வாக இழுத்துக் கொண்டு இருக்கிறார்.
இதனால் கடைசி இரண்டு மாதங்கள் சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் சலிப்படையும் அளவிற்கு வந்துவிட்டது. தற்போது நந்தாவின் மரணம் மூலம் சீரியல் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. இருந்தாலும் கடந்த மாதம் முழுக்க கண்டன்ட் இல்லாமல் இயக்குனர் சொதப்பியது டிஆர்பி ரேட்டிங்கில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
இவ்வளவு வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு போய்விட்டது மேலும் சிங்க பெண்ணே மற்றும் எதிர்நீச்சல் சீரியல்களோடு போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்த கயல் சீரியல் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. சொந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் இடமே தோற்று இருக்கிறது சிங்க பெண்ணே சீரியல்.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- ஆட்டம் கண்டு போன மித்ரா
- கொலையான நந்தா, பழியை சுமக்கும் ஆனந்தி
- சிங்க பெண்ணேக்கு பதிலா சில்லுனு ஒரு காதல்ன்னு வச்சுக்கலாம்