Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் சிங்க பெண்ணே சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது.
டிஆர்பி யில் எப்படி முதல் ஐந்து இடத்தை இந்த சீரியல் பெற்றுவிடுகிறது. இதற்கு காரணம் சீரியலின் ஹீரோ அன்பு என்றால் அது நிதர்சனமான உண்மை.
அதை தாண்டி அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் ஜெயிக்கிறதா, அல்லது மகேஷ் ஆக அன்பு விட்டுக்கொடுக்கப் போகிறானா என்பதுதான் தற்போது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிங்கப்பெண்ணே சீரியல்
பல நாட்கள் கழித்து மகேஷ் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஆனந்தியிடம் தெரிவித்து விட்டான்.
அதே நேரத்தில் அன்புவின் அம்மா தலையில் அடிபட்டு ஆபத்தான முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து அவருடைய சிகிச்சைக்காக மகேஷ் பண உதவி செய்தால் அன்பு தன்னுடைய காதலை தியாகம் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் தன் உயிரை காப்பாற்ற நினைத்த ஆனந்தியை அன்புவின் அம்மா ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
இந்த நிலையில், சன் டிவியில் விரைவில் திருமுருகன் இயக்கத்தில் நாதஸ்வரம் 2 ஒளிபரப்பாக இருக்கிறதாம். இதனால் தான் சிங்க பெண்ணே சீரியலை முடிக்க இருக்கிறார்கள்.
தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி என்னவாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது.
அன்பு தான் ஆனந்தியை காதலிக்கிறான் என்று தெரிந்தது அன்புக்காக மகேஷ் தன்னுடைய காதலை தியாகம் செய்வது போல் காட்டப்படுகிறது.
மேலும் மகேஷுக்கு வார்டன் தான் தன்னுடைய அம்மா என்பதும் தெரிய வந்துவிடுகிறது.
இந்த சீரியல் பெரும்பாலும் கோகிலாவின் திருமணத்தோடு அன்பு ஆனந்தியின் காதல் கைகூடி முடிவடைவது போல் காட்டப்பட இருக்கிறது.