Singapenne: சிங்க பெண்ணே சீரியல் வரவர ஜவ்வா இழுத்துக் கொண்டிருக்கிறது. சீரியலின் மையக்கருத்தை மறந்து விட்டு இயக்குனர் ஏதேதோ கதை சொல்லி சொதப்பி கொண்டிருக்கிறார். கிராமத்திலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக நகரத்துக்கு வேலைக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் சவால்கள் தான் இந்த சீரியலின் கதை.
ஆனந்தி கிராமத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கம்பெனியில் வேலைக்கு சேரும் வரை இந்த சீரியல் நேயர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டது. ஆனந்திக்கு ஆதரவாக அழகன் என்னும் கேரக்டரில் அன்பு நுழைந்த போது சீரியல் மற்றொரு பரிணாமத்தை அடைந்தது.
ஆனால் இதற்கு இடையில் மகேஷ் ஆனந்தியை காதல் செய்வது, நந்தா போலீ அழகனாக உள்ளே நுழைந்தது என மொத்தமும் தான். அதிலும் கடந்த வாரம் முழுக்க ஆனந்தியை யார் இம்ப்ரஸ் செய்வது என அன்பும் மகேஷும் மாறி மாறி பிளான் செய்தது பார்க்கவே சகிக்கவில்லை.
செம காண்டில் இருக்கும் நேயர்கள்
அதிலும் சிங்க பெண்ணே சீரியல் நேயர்களுக்கு அன்பு தான் அழகன் என்று ஆனந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பெரிய ஆசை. ஆனால் அந்த ஒரே கண்டனத்தை வைத்துக்கொண்டு மற்ற எதிலுமே கவனம் செலுத்தாமல் கடந்த இரண்டு மாதமாக எபிசோடுகளை நகர்த்துவது தான் தற்போது சலிப்பு ஏற்பட காரணமாகிவிட்டது.
இந்த வாரம் அழகன் யார் என தெரிந்துவிடும், அடுத்த எபிசோடில் அழகன் யார் என தெரிந்துவிடும் என்று நினைத்தால் கடைசியில் அரைச்ச மாவையே அரைச்சு வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அப்பா அம்மாவை சென்னைக்கு கூட்டிட்டு வந்த அன்புவை காதலிப்பதா, பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த மகேசை காதலிப்பதா என ஆனந்தி யோசிப்பது போல் வெளிவந்த ப்ரோமோ எல்லாம் அஷ்ட கோணல்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நந்தா, மித்ராவை பற்றி போலீஸிடம் சொன்னது போல் காட்டப்படுகிறது. ஆனால் அதுவும் நிஜமாக நடக்குமா?, இல்லை வழக்கம் போல மித்ராவின் கனவாக இருக்குமா என இனி தான் தெரியும்.
- சீரியல் பேர்தான் சிங்க பெண்ணே, செட்டில் பெண்களுக்கு நடக்கும் அநீதி
- அன்புவை முந்தி கொண்ட மகேஷ்
- ஆட்டையை கலைக்க ரெடியான மகேஷ்