சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஆர்ஜே பாலாஜியை முந்தினாரா அசோக் செல்வன்.. சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் முதல் நாள் கலெக்ஷன்

Singapore Saloon, Ayalaan First Day Collection : நேற்றைய தினம் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. அதாவது தைப்பூசம், குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிறுகிழமை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை பெறலாம் என்ற யுகத்தில் நேற்று இந்த படங்கள் வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப்போன நிலையில் நேற்று சொன்னபடி வெளியாகிவிட்டது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார்.

காமெடி மற்றும் எமோஷன் கலந்த இந்த படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை தான் பெற்று உள்ளது. அதாவது முதல் நாளில் ஒரு கோடி வசூலை சிங்கப்பூர் சலூன் படம் பெற்று இருக்கிறது. அதேபோல் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி இருந்தது.

Also Read : Singapore Saloon Review – சிங்கப்பூர் சலூனை வைத்து ஆர்ஜே பாலாஜியால் சாதிக்க முடிந்ததா.? சுடச்சுட வெளிவந்த முழு விமர்சனம்

கிரிக்கெட்டில் ஜாதிய அரசியல் பேசும் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இப்போது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனாலும் முதல் நாளில் ப்ளூ ஸ்டார் படம் 60 லட்சம் மட்டும் தான் வசூல் செய்திருந்தது.

மேலும் சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்கள் முதல் நாளில் வசூல் குறைவதற்கான காரணம் இப்போது திரையரங்குகளில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ப்ளூ ஸ்டார் படத்திற்கு கிடைக்கும் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் அதிக வசூலை குவிக்க வாய்ப்பு உள்ளது.

Also Read : Blue Star Movie Review – சிக்ஸர் அடித்ததா அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்.. முழு விமர்சனம் இதோ!

Trending News