இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் பாடலாசிரியர் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் தான் சிங்கீதம் சீனிவாச ராவ். இந்திய திரைத் துறையில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார். கமலஹாசனும் சிங்கீதம் சீனிவாசனும் இணைந்து எடுக்கப்பட்ட படங்கள் இன்றளவும் எல்லோராலும் பேசப்படுகிறது.
ராஜபார்வை: சிங்கீதம் சீனிவாசராவ், கமலஹாசன் இளையராஜா கூட்டணி எப்போதுமே வெற்றி தான். அந்த வகையில் இவர்களது கூட்டணியில் 1981ல் வெளியான திரைப்படம் ராஜபார்வை. இப்படத்தில் கமலஹாசன் பார்வையற்ற இளைஞனாக ரகுல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மாதவி, ஒய் ஜி மகேந்திரன், சாருகாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சந்தானபாரதி கங்கை அமரன், எஸ் பி பாலசுப்பிரமணி ஆகியோர் நடித்திருந்தார்கள். ராஜபார்வை கமலின் 100வது படமாகும். படம் தோல்வி அடைந்தது.
மைக்கேல் மதன காமராஜன்: உலகநாயகன் நான்கு வேடத்தில் நடித்து 1991ல் வெளியான திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன். இப்படத்தில் ஊர்வசி, குஷ்பு, ருபினி, நாகேஷ் ஆகிய பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு க்ரேஸி மோகன் திரைக்கதை எழுதி இருந்தார். இப்படத்தில் சில காட்சிகள் தவிர படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இருந்தது. தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் வெள்ளி விழா கண்டது.
அபூர்வ சகோதரர்கள்: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1989 இல் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் கமலஹாசன், கௌதமி, ரூபினி, ஸ்ரீவித்யா, மனோரமா, ஜெய்சங்கர், நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் சகோதரர்களாக நடித்திருந்தார். இப்படத்தில் கமலஹாசன் குள்ளமாக நடித்திருந்த அப்பு கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே ஆச்சரியத்துடன் வரவேற்ப்பை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
மகளிர் மட்டும்: மூன்று பெண்களை மையமாக கொண்டு 1994இல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகளிர் மட்டும். இப்படத்தில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி, கமலஹாசன் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடுத்தர பெண்ணாக ஜானகி கதாபாத்திரத்தில் ஊர்வசி, ஏழைப் பெண்ணான பாப்பமாவாக ரோகினி மற்றும் வசதி உள்ள பெண்ணாக சத்யா கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பிணமாக நடித்திருந்த நாகேஷின் சில நிமிட காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
காதலா காதலா: சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் 1998 இல் வெளியான திரைப்படம் காதலா காதலா. இப்படத்தில் சௌந்தர்யா, ரம்பா, நாகேஷ், வடிவேலு, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் முழுவதும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் சுமாராக ஓடியது.
மும்பை எக்ஸ்பிரஸ்: கமலஹாசன், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து 2005ல் வெளியான திரைப்படம் மும்பை எக்ஸ்பிரஸ். மேலும் நாசர், சந்தான பாரதி, கோவை சரளா, பசுபதி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இப்படத்தை கமல் தயாரித்திருந்தார். மும்பை எக்ஸ்பிரஸ் படம் முழுவதும் நகைச்சுவையா படமாக எடுக்கப்பட்டது. இப்படம் படுதோல்வி அடைந்தது.