வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இறுக்கி அணைத்தது ஒரு குத்தமா, டிடி-யை Metoo-வில் வசமாக சிக்க வைத்த சின்மயி.. வைரலாகும் பதிவு!

தென்னிந்திய சினிமா உலகில் முக்கிய பின்னணி பாடகியாக திகழ்பவர் தான் நடிகை சின்மயி. இவர் தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். மேலும் ஒரு காலத்தில் சின்மயின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

ஆனால் சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது, சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சின்மயின் பெயர் பெரும் டேமேஜ் ஆனது இதனைத்தொடர்ந்து சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களது விபரங்களை அனுப்பி வருகின்றனர்.

இந்த மெசேஜ்களை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சின்மயி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட பின்னணி பாடகர் கார்த்தியை பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒன்றை போட்டிருக்கிறார்.

அதாவது கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறியதோடு பிரபல பின்னணிப் பாடகரான கார்த்திக்கும் மீதும் பல்வேறு சர்ச்சையான பதிவுகளை தெரிவித்தார் சின்மயி. அதேபோல் கடந்த மார்ச் மாதம் கார்த்திக் பெண்களிடம் தவறாக மெசேஜ் அனுப்புவதாகவும், தவறாக தொடுவதாகவும், வெளிநாட்டு தமிழ் பாடகி கூறிய குற்றச்சாட்டை சின்மயி பதிவிட்டார்.

இதுபற்றி கார்த்திக்கும், ‘நான் அப்படிப்பட்டவன் அல்ல என்றும், தான் அப்படி செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்’ என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சின்மயின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க கார்த்திக் குறித்து மீண்டும் சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார் சின்மயி. அது என்னவென்றால் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட கார்த்திகை மாகாபா மற்றும் டிடி ஆகியோர் வரவேற்றனர்.

singer-chinmayi-cinemapettai

அப்போது கார்த்திக் டிடி-யை சாதாரணமாக அரவணைத்து இருந்தார். இதுகுறித்த சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மீடுவால்(#Metoo) யாருடைய வாழ்க்கையும் கெடுக்கவில்லை என்றும், இது ஆண்களின் உலகம் பாலியல் வாதிகளின் உலகம்’ என்றும் சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Trending News