திரையுலகின் முன்னணி பாடகியான சின்னக்குயில் சித்ரா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, அசாம், வங்காளம் என பல மொழிகளில் பாடி அசத்திய பெருமைக்குரியவர். இவர் 6 முறை இந்திய தேசிய திரைப்பட விருது, ஆறுமுறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளைப் பெற்று தென்னிந்தியர்கள் இடையே இசைக்குயில் என்றும் சின்னக்குயில் என்றும் சித்ரா புகழப்பட்டார்.
இவருடைய இனிமையான குரலுக்கு மயங்காதோர் எவருமிலர். இவர் தற்போது விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பு செய்யப்படும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக திகழ்கிறார்.
தற்போது சர்வதேச அளவில் பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களை கௌரவப்படுத்தும் வகையில் 10 ஆண்டுகளாக செல்லுபடியாகும் கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரக அரசு சின்னக்குயில் சித்ராவிற்கு வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
இந்தத் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு துவங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது சின்ன குயில் சித்ராவிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உயரதிகாரிகள் கோல்டன் விசாவை வழங்கி உள்ளது. இந்தத் திட்டம் துவங்கி மூன்றாண்டுகளுக்குப் பிறகு சின்னக்குயில் சித்ராவிற்கு கிடைத்த கோல்டன் விசா பற்றிய தகவல் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
![ks-chitra](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/10/ks-chitra.jpg)
மேலும் இந்த விசாவை பெற பல பிரபலங்கள் முயற்சிக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரக அரசிடமிருந்து கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.