திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

திருமண சர்ச்சையில் சூப்பர் சிங்கர் பிரபலம்.. விஜய் டிவிக்கு வந்துட்டாலே இது பழகிப் போய்விடும்

விஜய் டிவியின் பாப்புலர் ஷோக்களில் குறிப்பிடத்தக்க ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து பல வாய்ப்புகளை பெற்று திரைப்படங்களில் பிளேபேக் சிங்கர்களாகியுள்ளனர். மேலும் பலர் பல்வேறு பரிணாமத்தில் பிரபலமடைந்து உள்ளனர்.

அப்படி பிரபலமடைந்தவர் பாடகி மாளவிகா சுந்தர். இவர் டோலிவுட்டில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். பின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் பல பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் திறமையை நிரூபித்தார்.

தற்பொழுது இவரைக் குறித்த பேச்சுக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் 33 வயதான பாடகி மாளவிகா சுந்தருக்கு இப்போதுதான் திருமணம் நடைபெறப் போவதாகவும், மாப்பிள்ளைக்கு அவரை விட ஒரு வயது கம்மி என்றும் பல பேச்சுக்கள் எழுந்துள்ளன.

maalavika sundar
maalavika sundar

இதனை நிரூபிக்கும் விதமாக இவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வருங்கால கணவருடன் நெருங்கிய எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இவர் நடிகையாகவும் மாறி வருகிறார். அந்த விதமாக வெள்ளித்திரையில் நடிகை வரலட்சுமியுடன் இவர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்’. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாடகி மாளவிகா.

மேலும் அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழித் திரைப்படங்களில் பல பாடல்களை பாடி கலக்கியுள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்ட பாடல்களை திரைப்படங்களில் பாடி அசத்தியுள்ளார்.

Trending News