ரவீந்திர ஜடேஜா இப்பொழுது இந்திய அணியின் ஒரு அசைக்கமுடியாத தூண். தற்போது பவுலிங் பேட்டிங் பீல்டிங் என அனைத்திலும் அசத்திக் கொண்டிருக்கும் இவர் இந்திய அணியின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். இவர் ஒரு தோனியின் படைப்பு. இப்பொழுது ஐபிஎல் லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஜடேஜா.
இன்று வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்று இந்திய அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ள ரவீந்திர ஜடேஜா ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் 1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தவர் ரவீந்திர ஜடேஜா. இவருடைய தாத்தா காலத்தில் இவர்கள் பல வசதிகளோடு வாழ்ந்து வந்திருக்கின்றனர், பின் சொத்துக்கள் அனைத்தும் ஏதோ காரணத்தினால் கைவிட்டு சென்றது. அப்பா செக்யூரிட்டியாக பணிபுரிய, அம்மா குடும்ப சூழ்நிலை காரணமாக செவிலியர் பணிக்குச் செல்வாராம்.
ஜடேஜா உடன் பிறந்தவர்கள் இரண்டு அக்காக்கள். அப்பாவின் வருமானம் வீட்டுச் செலவிற்கு பத்தாதாம் அதனால் ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்வதற்காக பணமில்லாமல் கஷ்டப்பட்டு, எங்கே இலவசமாக கோச்சிங் கொடுக்கிறார்கள் என்று தேடி சென்று பயிற்சி எடுப்பாராம்.

ஜடேஜாவின் தந்தைக்கு அவரை ராணுவப் பணியில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்று ஆசையாம்.ஆனால் கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தால் தனது ஒன்பதாம் வயதில் இருந்தே பயிற்சி எடுத்தாராம்.
2006 ஆம் ஆண்டு தன்னுடைய 16ஆம் வயதில் U19அணிக்காக தேர்வானார். தன்னுடைய இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும் 2008 ஆம் ஆண்டு U19 இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார். அந்த ஆண்டு இந்திய அணி U19 உலக கோப்பையை வென்றது.

ஆரம்ப காலகட்டத்தில் இந்திய A அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு உள்ளார். 2009,2010ஆம் ஆண்டுகளில் அவர் மீது விதிமுறை மீறல் புகார் எழுந்து, 2011 உலகக் கோப்பை விளையாடும் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
பின் ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்து தனது வாய்ப்பை மீண்டும் இந்திய அணியில் தக்கவைத்துக் கொண்டார். இப்பொழுது இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி வந்த ரவீந்திர ஜடேஜாவின் அம்மா எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் மரணம் அடைந்துள்ளார். ஜடேஜா தான் வாங்கிய முதல் காரில் அவர் அம்மாவின் போட்டாவை நினைவாக வைத்துள்ளாராம்.
