வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஏடாகூடமான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிறகடிக்க ஆசை ரோகினி.. வெளியான புகைப்படத்தால் வாயடைத்த நெட்டிசன்கள்

Sirakadikkum Asai Serial Rohini put an end to the controversy: இப்போதைக்கு விஜய் டிவியின் டிஆர்பி மானத்தை காப்பாற்றக்கூடிய ஒரே சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் சரியாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருப்பது தான் இந்த சீரியலின் பிளஸ் பாயிண்ட். இதில் ரோகினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சல்மா அருண் அந்த கேரக்டருக்கு நச்சுனு பொருந்தி இருக்கிறார்.

ரோகினி, சிறகடிக்க ஆசை சீரியலில் வயதான ஒருவரை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு ஒரு பையன் இருக்கும் நிலையில், கணவரை இழந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அவருடைய மகன் அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறது. இரண்டாவது கணவரிடம் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை எதையுமே சொல்லாமல் மறைத்து விடுகிறார்.

இதைப் போன்று தான், நிஜ வாழ்க்கையிலும் சல்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன், ஒரு பையன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கொண்டிருந்தார். ஒருவேளை சல்மா அருணின் பெயருக்கு பின்னால் இருக்கும் அருண் என்ற நபர் யார்? அவருடன் சல்மாவிற்கு திருமணம் நடந்து விட்டதா? அல்லது விவாகரத்து ஆனவரா? அல்லது கணவன் இழந்தவரா? என ஏகப்பட்ட கேள்விகளை அவரிடம் சரமாரியாக எழுப்பினார்கள்.

Also Read: 4 மருமகளை காப்பாற்ற வந்த ஜீவானந்தம்.. தர்ஷினி விஷயத்துக்கு எண்டு கார்டு போடப் போகும் எதிர்நீச்சல்

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினியின் நிஜ குடும்ப புகைப்படம்

சிலர், ‘சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கேரக்டர் போலவே உங்களது நிஜ வாழ்க்கையும் அமைந்து விட்டதா!’ என்றும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சல்மாவை ரொம்பவே கஷ்டப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சல்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் அவருடைய கணவருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இதில், ‘பத்து வருடங்களாக என்னுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றால் அது உங்களால் தான். இந்த உலகத்திலேயே நீங்கள் தான் சிறந்த கணவர் மற்றும் சிறந்த தந்தையும் கூட. நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல சல்மாவின் மகனும் அவருடைய தந்தையோடு செம க்யூட்டாக சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சல்மாவை பற்றி தவறாக யூகித்து விட்டோமே! என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

நடிகை  சீரியல் சல்மாவின் கணவர் மற்றும் மகன் 

Nactress-salma-samily-cinemapettai
Nactress-salma-samily-cinemapettai

Also Read: முத்துவின் பாசத்தை அலட்சியப்படுத்தும் விஜயா.. பேராசையால் மருமகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மாமி

Trending News