வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முத்துவின் பாசத்தை அலட்சியப்படுத்தும் விஜயா.. பேராசையால் மருமகளை தூக்கி வைத்துக் கொண்டாடும் மாமி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொங்கலை கொண்டாடுவதற்காக பாட்டி இருக்கும் கிராமத்திற்கு குடும்பத்துடன் போயிருந்தார்கள். அங்கே சீரும் சிறப்புமாக எல்லா விஷயங்களையும் நடத்தி முடித்துவிட்டு தற்போது அனைவரும் சென்னைக்கு திரும்பி விட்டார்கள். இதற்கு இடையில் பாட்டி வீட்டில் அனைவரும் மனம் விட்டு பேசும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதில் முத்து அவருக்கு இருந்த மணக்குறையை தீர்க்கும் வகையில் எல்லா வேதனையும் கொட்டி தீர்த்து விடுகிறார். அதாவது அவர் பேசும்போது அம்மாவின் பாசத்திற்கு எந்த அளவிற்கு ஏங்கிப் போய் இருக்கிறார் என்பது தெரிகிறது. சின்ன வயதில் அம்மா என்னுடன் எவ்வளவு பாசமாக இருந்தார். நானும் அம்மாவை விட்டு கொஞ்சம் கூட பிரியாமல் ஒட்டிக் கொண்டே இருந்தேன்.

மறுபடியும் அந்த மாதிரி ஒரு நாட்கள் கிடைக்குமா என்று ஏங்கி வருகிறேன் என்று முத்து கண்ணீருடன் அம்மா மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் இது புரியாத விஜய்யா, சும்மா முத்து வாய்க்கு  வந்தபடி ஏதாவது உளறுவான் அவனை விடுங்கள் என்று முத்துவின் பாசத்தை அலட்சியப்படுத்தி விட்டார். இவர் எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டார் என்பதற்கு ஏற்ப விஜயாவின் நடவடிக்கை இருக்கிறது.

Also read: விஜயாவை தோற்கடித்து மண்ணை கவ்வை வைத்த முத்து.. ஆட்ட நாயகனாக கலைக்கட்டும் சிறகடிக்க ஆசை

அடுத்தபடியாக அனைவரும் சென்னைக்கு திரும்பி வந்து நிலையில் மீனா மறுபடியும் அவருடைய பூக்கடையை ஆரம்பிக்கப் போகிறார். இதற்கிடையில் ரோகிணி மாமா வந்து எல்லா சீர்வரிசையும் செய்ததை விஜயா பெருமையாக பேசி முத்து மீனாவை அசிங்கப்படுத்துகிறார். ஆனால் ரோகிணி எந்த அளவுக்கு ஏமாற்றி வருகிறார் என்பது தெரிந்தால் தான் விஜய்யாவின் கொட்டம் கொஞ்சமாவது அடங்கும்.

கூடிய விரைவில் ரோகினின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி முத்துவின் கண்ணில் சிக்குவார். அதன் பின் முத்து அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து குடும்பத்தின் முன் ரோகிணியின் முகத்திரையைத் உடைப்பார். இதற்கான விஷயங்கள் கூடிய விரைவில் நடந்தால் இன்னும் இந்த நாடகம் சுவாரசியமாக அமைந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தில் ஒன்றாக வந்துவிடும்.

Also read: முத்து போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய பிரௌன் மணி.. கிரேட் எஸ்கேப் ஆன ரோகினி

Trending News