செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ரொமான்ஸை தூக்கலாக போட்டு ரோகிணி டிராக்கை மறைக்கும் சிறகடிக்க ஆசை.. ரூமை கட்டி முடித்த முத்து மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொய் பித்தலாட்டம் செய்து வரும் ரோகிணி எப்பொழுது குடும்பத்தில் இருப்பவர்களிடம் கையும் களவுமாய் மாட்டப் போகிறார் என்பதை பார்க்கவே ஆவலுடன் இருக்கிறோம். ஆனால் ரோகிணி மாட்டிக் கொண்டால் இந்த சீரியலுடைய ஆர்வம் குறைந்து விடும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் எஸ்கேப் ஆகிக் கொண்டே வருகிறார்.

அதனால் இந்த நாடகத்தின் தூணாக இருக்கும் முத்து மற்றும் மீனா ரொமான்ஸ் கதையை தூக்கலாக காட்டி வருகிறார்கள். அந்த வகையில் முத்து சவாரி ஏத்திக்கொண்டு வரும்பொழுது கஸ்டமர்ரிடம் எதார்த்தமாக பேச வேண்டும் என்பதால் மீனாவை பற்றி கொஞ்சம் கிண்டலடித்து பேசி இருக்கிறார். அப்பொழுது மீனா பைக்கில் வரும் பொழுது முத்து காரில் வேண்டுமென்றே இடிக்கிறார்.

காமெடியில் ஆரம்பித்து காதலில் முடிந்த முத்து மீனாவின் செல்லமான சண்டை

பிறகு ரெண்டு பேருமே தெரியாத மாதிரி நடுரோட்டில் இருந்து சண்டை போடுகிறார்கள். அங்கே வந்த டிராபிக் போலீஸ் விசாரிக்கும் பொழுது முத்து, இவங்க என்னுடைய மனைவிதான் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார். பிறகு முத்து காரில் இருந்த அந்த கஸ்டமர் இவங்க தான் உங்க மனைவியா, பேய் ஆட்டம் ஆடுவாங்கன்னு சொன்னிங்களே அவங்க தானே என்று போட்டுக் கொடுத்து விடுகிறார்.

இதைக் கேட்ட மீனா கோபத்தில் வீட்டிற்கு போய்விடுகிறார். எப்படியாவது மீனாவை சமாதானப்படுத்த வேண்டும் என்று முத்து நினைக்கிறார். அந்த வகையில் நடு வீட்டில் இருக்கும் கட்டிலில் மறைவாக இருப்பதற்காக கொசு வலையே அடிப்பதற்கு ஒரு ஆளை அனுப்பி வைக்கிறார். அந்த ஆள் வீட்டுக்கு வந்ததும் முதலாளி அம்மா இருக்காங்களா என்று கேட்க அதற்கு விஜயா நான் தான் முதலாளி என்று சொல்கிறார்.

அப்பொழுது உங்க பெயர் என்ன என்று கேட்கும் பொழுது விஜயா என சொல்லுகிறார். இல்லை இந்த வீட்டின் முதலாளி மீனா என்று சொன்னார் என்று சொல்லும்போது விஜயா கோபப்பட்டு போய்விடுகிறார். உடனே மீனா வந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் பொழுது இல்லை உங்க கணவர் தான் என்னை அனுப்பி வைத்தார். உங்க வீட்டில் இருக்கும் உங்க கட்டிலில் கொசு வலையை மாட்ட சொன்னார் என்று சொல்லி கொசு வலையை மாட்டுகிறார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வரும் முத்து சமாதான கொடியை காட்டும் விதமாக மீனாவை சாந்தப்படுத்த நினைக்கிறார். ஆனால் மீனா நானா பேயாட்டம் ஆடுகிறேன் என்று கோபத்துடன் கேட்க, முத்து சமாதானப்படுத்தி காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு விடுகிறார். பிறகு முத்து, மீனாவிற்காக அல்வா வாங்கிட்டு குடுத்து சமரசம் செய்து விடுகிறார்.

ஆனால் மீனா நம்ம வீட்டுக்குள் போய் மறைவாக இருந்து சாப்பிடலாம் என்று சொல்லி கட்டிலில் மாட்டிக்கொண்ட கொசு வலையை போட்டுக்கிட்டு ஒரு தனி ரூம் அவர்களுக்கு என்று இருப்பது போல் சந்தோஷமாக இருவரும் ரொமான்ஸ் பண்ணி வருகிறார்கள். காமெடியில் ஆரம்பித்த இவர்களுடைய சண்டை கடைசியில் ரொமான்ஸில் முடிந்தது போல் முத்து மீனாவின் ட்ராக் ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது.

இதுதான் இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோல தனக்கு என்று இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை வைத்து கணவன் மனைவிகள் செல்லமாக சண்டை போட்டு அன்பையும் பாசத்தையும் காட்டி மனம் ஒத்தும் தம்பதிகளாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போதைக்கு ரோகிணி யாரிடமும் மாட்டுவதற்கு வாய்ப்பில்லை.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News