சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரோகினி கதையை முடிவுக்கு கொண்டு வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல்.. நாள் நட்சத்திரம் பார்த்து வெளியிட்ட விஜய் டிவி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் மூலம் தான் டிஆர்பி ரேட்டிங்கில் ஓரளவுக்கு அதிக புள்ளிகளை பெற முடிந்தது. அந்த வகையில் ஆரம்பத்தில் புதுசாக வந்த இந்த சீரியல் பல மாதங்களாக முதல் இரண்டு மூன்று இடங்களை பிடித்தது. ஆனால் போகப் போக ரோகிணி ஆட்டம் அதிகரித்துப் போவதும் முத்து மற்றும் மீனா தோல்வியை சந்தித்து வந்ததால் இந்த நாடகத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டது.

அதனாலயே இந்த நாடகத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் பின்னடைவை சந்தித்தது. தற்போது இதையெல்லாம் சரி செய்யும் விதமாக ரோகிணி கதைக்கு முடிவு கட்ட சிறகடிக்கும் ஆசை சீரியல் முடிவு பண்ணி விட்டது. அந்த வகையில் ஜீவா, கனடாவில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்படி வந்ததும் முத்துவை தான் எல்லா இடத்துக்கும் டிராப் பண்ண சொல்லுகிறார்.

அப்படி ட்ராப் பண்ணும் பொழுது ரிஜிஸ்டர் ஆபீசில் ஜீவாவுக்கு ஒரு முக்கியமான வேலை என்பதால் முத்துவை அங்க ட்ராப் பண்ண சொல்கிறார். அதே நேரத்தில் அங்கே ரோகிணி மற்றும் மனோஜ் அவர்கள் வீடு ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணும் விஷயமாக ரிஜிஸ்டர் ஆபீஸ் போகிறார்கள். அப்படி போகும் பொழுது ஜீவா அந்த ரோகினியை பார்த்து ரொம்பவே டென்ஷன் ஆகி முத்து காரில் ஏறி புலம்புகிறார்.

உடனே எரிச்சல் படும் ஜீவாவை பார்த்த முத்து என்னாச்சு ஏன் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ஜீவா, என்னுடைய வாழ்க்கையில் யாரை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேனோ, அவங்கள பாத்து தொலைச்சுட்டேன் என்று முத்துவிடம் கோபமாக சொல்கிறார். உடனே முத்து அது யார் என்று எனக்கு காட்டுங்க என்று கேட்ட நிலையில் ஜீவா, ரோகிணியை கையை காட்டி விடுகிறார்.

அதற்கு முத்து எதுவும் பேசாமல் ஏன் என்னாச்சு உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்ட நிலையில் ஜீவா நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லுகிறார். அப்படி சொல்லும் போது ரோகிணி மற்றும் மனோஜிடம் திருப்பிக் கொடுத்த 30 லட்ச ரூபாய் விஷயமும் முத்துவுக்கு தெரிய வருகிறது. உடனே இந்த விஷயத்தை முத்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லுகிறார்.

இதைப் பற்றி மனோஜிடம் முத்து அடித்து கேட்ட பொழுது மனோஜ் பயத்தில் அந்த பணத்தை வைத்து தான் நாங்கள் ஷோரூம் ஆரம்பித்தோம். எனக்கு இந்த ஐடியாவை கொடுத்தது ரோகிணி தான் என்று உண்மையை சொல்லிய நிலையில் அனைவரும் ரோகிணியை பிடித்து விட்டார்கள். அப்பொழுது உன்னுடைய அப்பா கொடுத்தது என்று சொன்னதெல்லாம் பொய்யா என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதே மாதிரி அண்ணாமலை வேலை பார்க்கும் ஸ்கூலில் க்ரிஷ் படித்து வருவதால் கிரிஷும் அண்ணாமலையிடம் சிக்கிவிட்டார். கிரிசை கூப்பிட்டு அண்ணாமலை விசாரிக்கும் பொழுது ரோகிணி தான் என்னுடைய அம்மா என்ற உண்மையையும் அண்ணாமலை இடம் சொல்லிவிடுகிறார்.

ஆக மொத்தத்தில் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப ரோகிணி எல்லா விஷயத்திலும் சேர்த்து வைத்து டிசம்பர் மாதத்தில் அவருடைய முகமுடியை கிழிக்கும் விதமாக விஜய் டிவி தற்போது முடிவு பண்ணிவிட்டது. இந்த தருணத்திற்காக தான் இத்தனை நாளாக நம் காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ப டிசம்பர் மாத இறுதியில் ரோகினி எல்லோரிடமும் சிக்கி தவிக்கப் போகிறார்.

Trending News