கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை பேபி ரக்ஷனாவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்த படத்தில் அவருடைய க்யூட்டான ரியாக்ஷன் துருதுருவான பேச்சு போன்றவை படத்தில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
ஆனால் இவர் இப்போது தற்போது நன்கு வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோஸ் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவுகிறது. இப்போது ரக்ஷனா 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12ஆம் வகுப்பு செல்கிறார்.
Also Read: அசர வைக்கும் வந்திய தேவனின் சொத்து மதிப்பு.. 25 படங்களில் இவ்வளவு கோடியா?
இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று காட்டுத்தை போல் பரவுகிறது. அதில், குழந்தை நட்சத்திரமாக சிறுத்தை அதைத்தொடர்ந்து கடல், ஓகே கண்மணி, யாழ் போன்ற படங்களில் நடித்த பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார். இவர் வளர்ந்து ஹீரோயின் ஆக மாற வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நாள் நடிக்காமல் இருந்தாராம்.
சிறுத்தை பட குட்டி திவ்யா

சீக்கிரம் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கப் போகிறார். இவர் நினைப்பது போலவே லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட நடிகைகள் எல்லாம் பள்ளி பருவத்திலேயே கதாநாயகியாக மாறி இருக்கிறார்கள். ஏன் கார்த்திக்கே ஹீரோயினாக ரக்ஷனா நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
நெடு நெடுன்னு வளர்ந்து விட்ட கார்த்தியின் ரீல் மகள்!

Also Read: கிராமத்து மண் வாசனையுடன் கார்த்தி ஜெயித்த 5 படங்கள்.. குடும்பங்கள் கொண்டாடிய கடைக்குட்டி சிங்கம்
இவர் படிப்படியாக வளர்ந்து தற்போது டீன் ஏஜில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். மேலும் இவருக்கு பக்கா தமிழ் நடிகையின் பேஸ் கட் இருப்பதால் நிச்சயம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை போட்டி போட்டுக் கொண்டு புக் செய்யப் போகின்றனர்.
ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பேபி ரக்ஷனா
