வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

படப்பிடிப்பிற்கு முன்னரே பல கண்டிஷன் போட்ட சூர்யா.. விழி பிதுங்கி நிற்கும் சிறுத்தை சிவா

தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு சூர்யாவின் அடுத்த திரைப்படம் தான். வணங்கான், வாடிவாசல், சூர்யா 42 என அடுத்தடுத்த படங்கள் அவருக்கு லைனாக காத்திருக்கின்றன. இதில் சூர்யா 42 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யா, சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

சூர்யா, பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் பணியாற்றுகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

Also Read : கேஜிஎஃப் பாணியில் சூர்யாவின் 42-வது படம்.. மாஸாக வந்து பூஜை போட்ட ரொலெக்ஸ் புகைப்படம்

வணங்கான், படத்துல சூர்யா மீனவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாகவே பாலா நடிக்கும் படங்களில் கேரக்டருக்காக நடிகர்கள் அவர்களுடைய தோற்றத்தில் என மாற்றம் வேண்டுமோ மாற்றி கொள்வார்கள். அப்படி தான் சூர்யாவும் இப்போது வணங்கான் பட கெட்டப்பில் இருக்கிறார்.

சிறுத்தை சிவாவின் படத்தில் சூர்யாக்கு மூன்று கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பா, பையன், தாத்தா என மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதற்காகவும் சூர்யா கெட்டப் சேஞ் செய்ய வேண்டும் என்பதால் பட சூட்டிங் தாமதாகிறது. சூர்யாவிற்கு அடுத்தடுத்து படங்களுக்கான சூட்டிங்கும் இருக்கிறது.

Also Read : ஒரே திரையில் பட்டையைக் கிளப்ப வரும் டில்லி, ரோலக்ஸ்.. லோகேஷ் செய்ய காத்திருக்கும் சம்பவம்!

இதனால் சூர்யா, சிறுத்தை சிவாவிடம் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க சொல்லியிருக்கிறாராம். இதனால் சிறுத்தை சிவா பயங்கர சிக்கலில் மாட்டியுள்ளார். ஆனால் பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றால் கொஞ்சம் பொறுத்துதான் போக வேண்டும்.

சூர்யா 42 பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் 10 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது. இந்த படம் தான் சூர்யாவின் முதல் பான் இந்தியா படம் ஆகும். சூர்யாக்கு வணங்கான், வாடிவாசல், மற்றும் 42 வது படம் என தொடர்ந்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : கல்லா கட்ட வித்தியாசமாக ரிஸ்க் எடுக்கும் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய சிறுத்தை சிவா கூட்டணி

Trending News