சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் விஸ்வாசம். அன்றுவரை வந்த அஜித் படங்கள் அனைத்தின் வசூல் ரெக்கார்டுகளையும் இந்த படம் உடைத்தெறிந்தது.
அதற்கு முன்னர் தான் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா மற்றும் தல அஜித் இருவரும் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றியுள்ளனர்.
விஸ்வாசம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அந்த படத்திற்கு இசையமைத்த இமானுக்கு தேசிய விருது கிடைத்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தின் கதையை எடுக்க அவரது சொந்தம் தான் காரணம் எனவும் கோலிவுட்டில் பரபரப்பாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
சிறுத்தை சிவாவின் தம்பி பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடந்ததாம். அதற்கு காரணம் பாலா ஒரு இசைக் கச்சேரி குழு ஆரம்பித்த பிறகு அதிலேயே முழு கவனம் செலுத்தியதால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்ததாக கூறியுள்ளனர்.

அவர்களின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து தான் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை எடுத்ததாக தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிறுத்தை சிவா தானாகவே முன்வந்து இந்த வதந்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இசைக்குழு பிரச்சனையை அஜித்துக்கு அடிக்கடி பஞ்சாயத்து பிரச்சனை வருவதைப் போல காட்சி அமைத்து விட்டாராம் சிறுத்தை சிவா.
மேலும் இந்த நேரத்தில் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது கிடைத்ததை மட்டுமே பேச விரும்புவதாக சிறுத்தை சிவா இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் சிறுத்தை சிவாவின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தான் அந்த செய்தி பரப்பப்பட்டது அவருக்கு தெரியாதா என்ன.