வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவாவின் அடுத்த படம்.. மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி

Siruthai Siva : இன்று சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான கங்குவா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒருபுறம் படத்தைப் பற்றி சில நெகடிவ் விமர்சனங்களை பரப்பினாலும் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இரண்டு வருடங்கள் காத்திருந்ததற்கு சிறுத்தை சிவா ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். அதோடு எதிர்பார்க்காத விதமாக இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியின் என்ட்ரி பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக யார் படத்தை இயக்குகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் அஜித்துடன் மீண்டும் ஐந்தாவது முறையாக கூட்டணி போட இருக்கிறாராம். ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் என நான்கு படங்களை அஜித்தை வைத்து இயக்கியிருந்தார்.

கங்குவா படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவின் அடுத்த படம்

இதில் விசுவாசம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. மேலும் தற்போது அஜித் மகிழ்திருமேனியின் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது.

அதன் பிறகு அஜித் வேர்ல்ட் டூர் செல்ல இருக்கிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு கோடையில் சிறுத்தை சிவா உடன் ஆன படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் அதே ஆண்டு தீபாவளிக்கு அல்லது கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தான் தயாரிக்க உள்ளாராம். இதற்கான அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகையால் ஐந்தாவது முறையாக அஜித், சிறுத்தை சிவா கூட்டணி இணைவது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Trending News