வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கங்குவா நெகட்டிவ் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிறுத்தை சிவா.. கார்ட்டூன்னு சொன்னதுக்கு கொடுக்கும் பதிலடி

Kanguva Movie: சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் தான் கங்குவா. 3d அனிமேஷனில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் நிலையில் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஹைப்பை ஏற்படுத்த வேண்டும் என சில வீடியோக்களை வெளியிட்டது.

மேலும் இந்த வீடியோக்கள் ஒரு புறம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்றொருபுறம் கேலி கிண்டலுக்கு உள்ளானது. ஏனென்றால் அந்த வீடியோவில் அனிமேஷனை பார்க்கும் போது கார்ட்டூன் போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். மேலும் படமும் அப்படித்தான் எடுத்திருக்கிறீர்களா என கமெண்ட் செய்து வந்தனர்.

Also Read: வெற்றிமாறருடன் பலமுறை ஏற்பட்ட ரகசிய சந்திப்பு.. வாடிவாசலை நம்பிய சூர்யாவின் கனவில் விழுந்த இடி

பொதுவாக ஒரு படத்திற்கு இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்கள் தொடங்குவதற்கு முன்பே வெளியானால் யாரும் பெரிய அளவில் காதில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே அண்ணாத்த படத்தில் பெருத்த அடி வாங்கி உள்ளதால் சிறுத்தை சிவா இதை கருத்தில் கொண்டு உள்ளார்.

இதனால் கங்குவா படத்தின் விஎஃப்எக்ஸ் டீமை அழைத்து எல்லோரையும் ஒழுங்காக வேலை பார்க்கும்படி லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம். மேலும் ரசிகர்களிடம் இதுபோன்ற விமர்சனம் இனி வரவே கூடாது என கட்டன் ரைட்டாக கூறியுள்ளதால் விஎப் எக்ஸ் டீம் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்களாம்.

Also Read: எதிர்பார்த்த 3 படங்களுமே மண்ணை கவ்வியது.. உங்களுக்கெல்லாம் நோ தேசிய விருது என சாத்தப்பட்ட சட்டர்

மேலும் இப்போது எடுத்த காட்சிகளில் மீண்டும் வேலைகள் இருப்பதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே சிறுத்தை சிவா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தயாரிப்பு நிறுவனமும் படம் பக்காவாக ரெடியான பின்பு ரிலீஸ் தேதியை அறிவித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.

ஆகையால் கங்குவா படத்தின் ரிலீஸ் சற்று தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தரமாக கொடுக்க வேண்டும் என்ற சிறுத்தை சிவாவின் எண்ணத்திற்கு ஏற்ப கங்குவா தாறுமாறாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read: இனி தனியா, கெத்தா நான் தெரியணும்.. பல லட்சம் செலவு செய்து கார்த்திக் எடுக்கும் புது அவதாரம்

Trending News