ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி நடிக்க மறுத்த படத்தை நடித்துக் காட்டிய ரசிகன்.. உச்சகட்ட குதூகலத்தில் கும்மாளம் போடும் மொத்த டீம்

Actor Rajinikanth: ரஜினி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட 48 வருடங்கள் ஆகிறது. இதில் எத்தனையோ வெற்றி தோல்விகளை பார்த்து வந்த இவர், தொடர் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கைகளும் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற இமேஜுடன் பயணித்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது வரை சுமார் 170 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து சினிமாவில் பயணித்து வரும் இவர், படையப்பா படத்திற்கு பிறகு எந்த ஒரு பிரேக்கும் எடுக்காமல் நடிப்பை கொடுத்து வருகிறார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி ரஜினிக்கு ஒரு பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. இதனை தொடர்ந்து அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திணறிக் கொண்டிருந்தார்.

Also read: ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

அந்த நேரத்தில் இவர் கையில் எடுத்த படம் தான் பாபா. இவரு குருவாக நினைக்கக்கூடிய பாபாவை வைத்து எடுக்க வேண்டும் என்று இவருடைய நீண்ட நாள் ஆசை. அதற்கேற்ற மாதிரி கதை அமைந்ததும் ரொம்ப சந்தோஷத்தில் ஆர்வமாக நடித்தார். ஆனால் இப்படம் இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடாமல் போய்விட்டது.

அத்துடன் இப்படத்தின் மூலம் இவருடைய சினிமா கேரியருக்கு பெரிய அடியாக அமைந்து. இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டது, இந்த நஷ்டத்தை ஈடு கட்டும் பொறுப்பாக பட தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பணம் கொடுத்து சரி கட்டினார். அதனால் இதற்கு அடுத்து உடனே ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் ரஜினி இருந்தார்.

Also read: அதிரடியாக சென்சார் போர்டில் இருந்து வெளிவந்த ஜெயிலர் விமர்சனம்.. ரஜினி-நெல்சன் தல தப்புமா?

அப்பொழுது இவருக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் சந்திரமுகி படம். இந்த படம் இவருக்கு ஒரு மாஸ் கொடுத்து, திரையரங்குகளில் 890 நாட்கள் ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இதனுடைய இரண்டாம் பாகத்தை கடந்த வருடம் எடுக்க முடிவு செய்திருந்தார்கள். இது சம்பந்தமாக இவரை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் ரஜினி என்னால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். அப்பொழுது இவருக்கு பதிலாக இவருடைய சிஷ்யன் ராகவா லாரன்ஸ் நடிக்க வைத்தார்கள். அந்த வகையில் சந்திரமுகி இரண்டாம் பாகம் படுஜோராக உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரிவியூ பார்த்த அனைவரும் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இப்படம் அவ்வளவு சூப்பராக வந்திருக்கிறதாம். அதனால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்று மொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் குதூகலமாக கும்மாளம் போட்டு வருகிறார்கள்.

Also read: கமலை ஆதரித்து, ரஜினியை வளரவிடாமல் செய்த பாலிவுட்.. சூழ்ச்சிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

Trending News