தமிழ் சினிமாவில் அக்கா தங்கைகள் இணைந்து நடித்து வெற்றி கண்ட படங்களை தற்போது பார்க்கலாம். இந்த காலத்தில் ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வெளிவருகின்றன. இதனால் சில முன்னணி நடிகைகள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், திரிஷா போன்றவர்களைச் கூறலாம்.
அம்பிகா, ராதா: மணிரத்தினம் இயக்கத்தில் 1985 இல் வெளியான திரைப்படம் இதயகோவில். இப்படத்தில் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் அம்பிகா கௌரி கதாபாத்திரத்திலும், ராதா சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
காதல் பரிசு: ஜெகநாதன் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக அம்பிகா, ராதா நடித்த படம் காதல் பரிசு. இத்திரைப்படத்தின் இசையை இளையராஜா. இப்படத்தில் அம்பிகா, ராதா இருவரும் மாலினி, சித்ராவாக நடித்திருப்பார்கள்.
எங்கேயோ கேட்ட குரல்: 1987இல் இத்திரைப்படம் வெளியானது எங்கேயோ கேட்ட குரல். இப்படத்திற்கு கதை, வசன, தயாரிப்பு பஞ்சு அருணாச்சலம். இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் எஸ் பி முத்துராமன். இப்படத்தின் இசை இளையராஜா.இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அம்பிகா, ராதா நடித்திருப்பார்.
ராதிகா, நிரோஷா: எம் ஆர் ராதாவின் மகள்களான ராதிகா, நிரோஷா இருவரும் 1989 இல் வெளிவந்த கைவீசம்மா கைவீசு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். இப்படத்தை வினோத் இயக்கியிருந்தார் .முரளி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
பானுப்பிரியா, சாந்திப்பிரியா: 1990 இயக்குனர் அமிர்தம் இயக்கி வெளியான திரைப்படம் சிறையில் பூத்த சின்ன மலர். இப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பானுப்பிரியா, சாந்தப் பிரியா இருவரும் சித்ரா, மங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.