வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஞானவேலுக்கும் சூர்யாக்கும் சிறுத்தை சிவா செய்த துரோகம்.. கடைசி வரை காட்டாத உண்மை முகம்

உலகத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் கங்குவா படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் தான் பரவி கிடக்கிறது. இப்பொழுது அந்தப் படத்தை எப்படியாவது தூக்கி நிறுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர் படக் குழுவினர். அதற்காக படத்தின் முதல் அரை மணி நேரத்தை முழுவதுமாக குறைக்கின்றனர்.

அதுவும் போக இந்த படத்தில் சத்தமும் இறைச்சலும் அதிகமாக இருக்கிறது என்று அதையும் சரி செய்கின்றனர். இன்றிலிருந்து சீர் செய்யப்பட்ட காட்சிகளோடு கங்குவா படம் திரையிடப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிறுத்தை சிவா தயாரிப்பாளர் ஞானவேலுக்கும், நடிகர் சூர்யாவிற்கும் , பெரிய துரோகம் விளைவித்ததாக கூறப்படுகிறது.

ஞானவேல் ராஜா, சூர்யா மற்றும் படம் சம்பந்தப்பட்ட ஆட்கள் யாருக்குமே சிறுத்தை சிவா இந்த படத்தை முழுவதுமாக காட்டவில்லையாம். படத்தில் 40 நிமிஷ காட்சிகளை மட்டும் ஒரு கிளிம்ஸ் வீடியோ போல் காட்டி இருக்கிறார். படத்தை பிசினஸ் செய்வதற்காக நன்றாக இருக்கும் சில வீடியோ காட்சிகளை மட்டுமே காண்பித்துள்ளார்.

இதனை மட்டும் நம்பி மொத்தமுமாய் ஏமாந்துள்ளனர் சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா. இப்பொழுது படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனத்தால் பிசினஸ் கேள்விக்குறியானது . ஏற்கனவே இந்த படத்திற்காக நிறைய பைனான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். 100 கோடிகள் டிசம்பர் இறுதிக்குள் செலுத்த வேண்டும் இல்லை என்றால் வட்டி அதிகமாகும்.

சிறுத்தை சிவா மீது அதீத நம்பிக்கை வைத்து இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டார் ஞானவேல் ராஜா. பிசினஸ்காக தொகுக்கப்பட்ட காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு படம் முழுக்க இப்படி தான் இருக்கும் என தப்பு கணக்கு போட்டு மொத்தமாய் பெயரை கெடுத்துக் கொண்டனர்.

Trending News