திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்.. அப்போ காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ஒரு சிறந்த நகைச்சுவை படமாக இப்படம் திகழ்ந்து வருகிறது.

தமிழில் சிறந்த காமெடி படம் என்றால் காசேதான் கடவுளடா படம் மட்டும்தான். இப்படத்திற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இந்நிலையில் இயக்குனர் கண்ணன் இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார். இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு நடிக்க உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது இப்படத்தில் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார் மேலும் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

yogibabu
yogibabu

ஏற்கனவே குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலமான புகழும் இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக புகழ் மற்றும் சிவாங்கிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் காம்போ மிகவும் பிரபலமாகும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். சிவாங்கி ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் புகழும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News