வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவாஜியின் இந்த படத்தால் தூக்கத்தைத் தொலைத்த சிவகுமார்.. 10 வயதில் பைத்தியம் பிடித்த சினிமா ஆசை

தமிழ் சினிமாவில் நடிப்பு நாயகனாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் இவரது நடிப்பு தான் பெரிய அளவில் பேசப்படும் அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். தற்போது வரை நடிப்பிற்கு உதாரணமாகவும் இருந்து வருகிறார்.

சிவாஜி கணேசன்நடிப்பு மட்டுமில்லாமல் அவர் உச்சரிக்கும் வசனங்களும் அவரது உடை நடை பாவனைகள் தான் இன்றுவரை யாராலும் பின்பற்ற முடியாத அளவிற்கு உள்ளது. தற்போது வரை நடிப்பு என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிவாஜிகணேசன் தான் அந்த அளவிற்கு சிவாஜி கணேசனின் நடிப்பு ரசிகர்களை தாண்டி பல நடிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளது.

சிவாஜிகணேசனுடன் நடிகர் சிவகுமார் சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இவர் சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து மிரண்டு போனதாகவும் எப்படி ஒரு மனிதனின் இந்த மாதிரியெல்லாம் நடிக்க முடிகிறது என ஆச்சரியப் பட்டதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவாஜி கணேசனின் அவர்களுடன் நடிக்கும் போது அவருடைய நடிப்பு தான் பெரிதாகத் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் 10 வயதில் சிவக்குமார் தனது ஊரில் ஒரு பெட்டிக்கடையில் சிவாஜி கணேசன் பராசக்தி புகைப்படம் இடம் பெற்றுள்ளது பார்த்து இப்படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து திரையரங்குக்கு சென்றதாகக் கூறியுள்ளார். மேலும் படத்தை பார்த்து வந்த பிறகு சிவாஜிகணேசன் நடிப்புதான் சில நாட்கள் கண்ணு முன்னாடி வந்ததாகவும் தூக்கம் கூட வராமல் சில நாள் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தை பார்த்து விட்டு தற்போது வரை பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் சிவாஜி கணேசன் அணிந்திருக்கும் கேபர்ரின் உடையை போலவே தானும் உடை அணிய வேண்டும் என்பதற்காக அந்த உடையின் பெயரை கண்டுபிடித்து சிலநாட்கள் அதேபோல் உடை அணிந்து வந்ததாக கூறியுள்ளார். தற்போது வரை சிவாஜிகணேசன் நடிப்புதான் தனது பிடிக்கும் எனவும் இவரை போல் எந்த ஒரு நடிகராலும் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்

Trending News