Sivaji Ganesan and rajini acting the gangster film Billa was preceded by 2 legends: சினிமாவில் கொடி கட்டி பறந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளாகவும் தூண்களாகவும் உள்ளனர்.
இதில் எம்ஜிஆர் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலிலும் கால் பதித்து தமிழ்நாட்டிற்கு பல தொண்டுகள் புரிந்தார்.
சிவாஜி அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கலை துறையில் தனது சேவையை நிறைவு செய்தார் என்றே கூறலாம். இன்றைய தலைமுறை நடிகர்கள் சிலர் அவருடன் இணைந்து பணியாற்றிய பெருமையை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்கள் சிவாஜியுடன் இணைந்து படிக்காதவன், படையப்பா, விடுதலை போன்ற சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் விடுதலை என்பது திருடன் போலீஸ் கதையை கருவாக அமைத்து படத்தின் இறுதி வரை பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் வைக்காமல் அமைந்த கேங்ஸ்டர் ஸ்டோரி ஆகும்.
1986 இல் கே விஜயன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார்கள் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்துடன் கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன், மாதவி என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து இருந்தனர்.
அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சில காட்சிகளில் தோன்றியிருந்தார். இந்தியில் வெளிவந்த குர்பானி என்ற படத்தின் தமிழாக்கமே ரஜினியின் விடுதலை ஆனது.
சிவாஜியை சுத்த விட்ட சூப்பர் ஸ்டார்
தந்திரக்கார திருடனாக ரஜினியும் ரஜினிக்கு உதவும் தோழனாக கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தனும் இவர்கள் இருவரையும் பொறிவைத்து பிடிக்கும் ராஜாசிங்கமாக சிவாஜி தோரணை காட்டி இருந்தார்.
ஒவ்வொரு முறையும் சிவாஜியிடம் மாறு வேஷம் போட்டு ரஜினி மாட்டிக் கொள்வது போல் வந்து எஸ்கேப் ஆகி விடுவார். அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் காட்சிகளை வடிவமைத்திருந்தார் இயக்குனர் கே விஜயன்.
“நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டு பாருங்க” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் போல் வேடமிட்டு அடிக்கடி சிவாஜியை சீண்டி இருப்பார் சூப்பர் ஸ்டார்.
சிவாஜி ரஜினி இருவரும் போட்டி போட்டு நடித்து இருந்தனர். 1986 இல் வெளிவந்த தரமான கேங்ஸ்டர் ஸ்டோரியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.