நடிப்பில் எப்படி சிவாஜியோ, அதேபோல் ஸ்டைலான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன் கைவசம் வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
ஜஸ்டிஸ் கோபிநாத்: 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜஸ்டிஸ் கோபிநாத். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்திருந்தனர். இப்படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். சிவாஜி கணேசன் ஜஸ்டிஸ் கோபிநாதாகும் ரஜினிகாந்த் ரவி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
படிக்காதவன்: கே விஜயன் இயக்கிய திரைப்படம் 1987 இல் வெளியான திரைப்படம் படிக்காதவன். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், நடித்துள்ளனர்.
சந்திரபோஸ்: ரஜினிகாந்தின் அண்ணனாக சிவாஜி நடித்திருப்பார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் அம்பிகா நடித்திருப்பார்.
படையப்பா: 1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ், என பலரும் நடித்து வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்தின் தந்தையாக சிவாஜி நடித்து இருப்பார்.இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற 200 நாட்களை தாண்டி ஓடியது.
